பக்கம்:வைணமும் தமிழும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

109


மணவாளன் முன் நிறுத்த, அவ்வெம்பெருமானும் அவளை வரவேற்றுப் பெருவிருப்புடன் அங்கீகரித்தருளினான். ஆண்டாளும், அப்பெருமானுடன் கலந்து மறைந்தாள். இவ்வரலாறு பின் பழகிய பெருமாள் ஜீயர் 'குருபரம்பரை’ முதலியவற்றில் நுவலப் பெற்றதாகும்.

இவரது அருளிச் செயல்கள் : இப்பெருமாட்டி அருளிச் செய்தவை (1) திருப்பாவை (2) நாச்சியார் திருமொழி. என்ற இரண்டு பிரபந்தங்களாகும். இவை இரண்டும்முறையே முதலாயிரத்தில் பெரியாழ்வார் திருமொழிக்கு அடுத்து இடம் பெற்றுள்ளன.

இவர் காலம்: பெரியாழ்வார் வாழ்ந்த காலமே. வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று.(திருப் 13) என்ற குறிப்பினை எடுத்துக் கொண்டு ஆய்ந்து இக் காலத்தை அறுதியிடுவர் மு.இராகவய்யங்கார் (கி.பி. 731) பேராசிரியர் டாக்டர் ந.சுப்பு ரெட்டியார் இவர் வாழ்ந்த காலம் கி.பி. 850 ஐச் சுற்றிய ஆண்டுகளாகக் கொள்வர்.[1] இவர் காலத்தைக் கடைச்சங்க காலமாகக் கருதுவது பொருந்தாது.[2]

(11) நம்மாழ்வார் : இவர் பாண்டி நாட்டில் நெல்லை மாவட்டத்தில் பொருநையாற்றங் கரையிலுள்ள 'ஆழ்வார் திருநகரி' என்று வழங்கும் திருக்குருகூரில் திருமாலிடம் வழி வழியாக அன்பு பூண்டொழுகும் வேளாளர் குலத்தில் சேனை முதலியாரின் கூறாக வைகாசித் திங்கள் பெளர்ணமியுடன்


  1. Religion and Philosophy of Nalayiram with Special Reference to Nammalvar.
  2. ஈ.எஸ். வரதராச ஐயர்: தமிழ் இலக்கிய வரலாறு வைணவமும் தமிழும் - அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1957