பக்கம்:வைணமும் தமிழும்.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
148
வைணவமும் தமிழும்

மங்கை நாச்சியாரை எழுந்தருளப்பண்ணி திருவாழி திருச்சங்கு சாதித்தருளினார். இதனால் அவனுக்கு மாமனாரும் ஆசாரியருமானார். திருக்குறுங்குடி நம்பிக்குப் பஞ்சசம்ஸ்காரம் செய்து ‘இராமாதுசநம்பி' என்ற தாசிய நாமம் சாத்தியருளினார். தில்லி பாட்சாவிடமிருந்த செல்வபிள்ளையை திரு நாராயணபுரத்தில் எழுந்தருளப் பண்ணினார். இவருக்கு ஆசாரியர்கள்: 'பெரிய நம்பி, திருமாலையாண்டான், திருக்கோட்டியூர் நம்பி, திருவரங்கப்பெருமாளரையர், பெரியதிருமலைநம்பி, திருக்கச்சி நம்பி'[1] சீடர்கள்: எம்பார், முதலியாண்டான், கூரத்தாழ்வான், கந்தாடையாண்டான், புண்டரீகாட்சர், (பெரிய நம்பியின் திருக்குமாரர்), தெற்காழ்வான், (திருக்கோட்டியூர்நம்பியின் திருக்குமாரர்) சொட்டைநம்பி (ஆளவந்தாரின் திருமகனார்), அணியரங்கத் தமுதனார் பிள்ளை, கோவிந்த சீயர் (யாதவப் பிரகாசர்), பிள்ளை உறங்கா வில்லிதாசர், பொன்னாச்சியார் (வில்லிதாசரின் தேவிகள்) இன்னும் பல அம்மையார்கள், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் சீயர், வடுகநம்பி, சுந்தரத் தோளுடையார் (திருமலையாண்டான் குமாரர்), பிள்ளைத் திருமலைநம்பி (பெரியதிருமலை நம்பி குமாரர்), திருக்குருகைப் பிரான் பிள்ளான், இன்னும் ஆயிரம் சீடர்கள், 12000 ஏகாங்கள், 74சிம்மாசனாதிபதிகள், 700கீடர்கள் 300 கொத்தை யம்மைஷியகளும்,சாத்தின.சாத்தாத முதலிகளும்,மகாராசர்களும், திருநாராயணபுரத்தில் ஐம்பத்திருவரும் மற்றும் பலரும்.

இவருடைய திருமேனிகள் நான்கு (1) நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் கொடுத்தருளிய ‘பவிஷியதாசார்யர்


  1. பார்ப்பனர்கள் எழுதிய நூல்களின் திருக்கச்சி நம்பியைத் தவிர்த்திருப்பது வருந்தத்தக்கது.