பக்கம்:வைணமும் தமிழும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ மந்திரங்கள்

215


இதற்கு நீ தப்ப வேண்டுமானால் அவன் திருவடிகளில் தலை சாய்க்கையைத் தவிர வேறு வழி இல்லை. குற்றங்கள் நிறைந்த உன்னை அவன் ஏற்றுக் கொள்வானோ? என்ற ஐயம் வேண்டா, ருசி பிறந்த அளவில் உன்னுடைய குற்றங்கள் அனைத்தையும் பொறுப்பான்; இனியவையாகவும், கொள்ளுதற்கு ஈடானவு மான குணங்களால் நிறைந்தவன் என்ற புகழ் பெற்றவன். ஆகவே நீ உய்ய வேண்டுமானால் அவனை அடைந்திடுக” என்று நல்லுபதேசம் செய்வார். இதனைப் பிள்ளை உலக ஆசிரியர்,

         “உபதேசத்தால் மீளாதபோது
         சேதநனை அருளாலே திருத்தும்;
         ஈசுவரனை அழகாலே திருத்தும்"[1]

என்று அழகாக விளக்குவர். பெரிய மிடுக்கனும் முரடனுமான அதுமனையே தம் உபதேசத்தாலே பொறுக்குமாறு செய்தவர்”[2] தம் அழகில் சிக்குண்டு தம்மிடம் அளவுகடந்த அன்புடையவனும்,[3] தம் சொல்லின்படி நடப்பவனுமான பெருமானைப் பொறுக்குமாறு செய்வார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

துவயமந்திரத்தின் முதல் வாக்கியத்தில் பூ + மந் + நாராயண + சரணெள+ சரணம்+ ப்ரபத்யே என்ற ஆறு பதங்களும் பதினைந்து எழுத்துகளும் இரண்டாம் வாக்கியத்தில் ஸ்ரீமதே+நாராயண+ஆய+நம: என்ற நான்கு பதங்களும், பத்து எழுத்துகளும் உள்ளன. -


  1. 11. ரீவச. புஷ14 (புருஷோத்தம நாயுடு பதிப்பு).
  2. 12. அசோகவனத்தில் அநுமன்பிராட்டியை இம்சித்த அரக்கிமாரைத் தம்மைத் துன்புறுத்தியது அரசாணைப்படியேயன்றித் தாமே பிழை செய்திலர் என்று மாருதியைச் சமாதானப்படுத்தினர் என்பது இராமாயண நிகழ்ச்சி.
  3. 13. திருவிம்பால் கொண்டவனாதலால்திற்ால் ஆளன் என்று நகைச்சுவையுடன் கூறுவர் கவிராஜ பண்டிதர் ஜகவீரபாண்டியனார்.