பக்கம்:வைணமும் தமிழும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடுபேற்றிற்குரிய வழிகள்

267


என்ற திருவாய்மொழிப் பாசுரத்தால் தெரிவிக்கின்றார் ஆழ்வார். இக்கருமயோகத்தினால்தன்னை மறத்தல்,மனத்தைக் கட்டுப்படுத்தல், ஆன்மாதுபவம்பெறல் போன்ற நிலைகள் ஏற்பட்டு சமுசாரத்தில் ஆழ்ந்திருக்கும் ஆன்மா துய்மையுறுகின்றது.

(ஆ). ஞானயோகம்: கருமயோகத்திற்கு அடுத்த நிலை இது. இந்த நிலையை,

          ஞானத்தால் நன்குணர்ந்து
              நாரணன்தன் நாமங்கள்
          தானத்தால் மற்று.அவன்பேர்
              சாற்றினால், வானத்து
          அணிஅமரர் ஆக்குவிக்கும் (இரண்-திருவந்2)


      [தானம்-அன்பின் முடிவெல்லை யானஇடம் சாற்றினால்
      - அநுசந்தித்தால், அணி அமரர்-நித்தியசூரிகள்]

என்பது பூதத்தாரின் திருவுள்ளக்குறிப்பு. கருமயோகத்தில் துய்மை அடைந்த ஆன்மா இந்நிலையில் தியானத்தில் ஆழ்கின்றது. முன்னர்க்குறிப்பிட்ட இயமம், நியமம் போன்ற செயல்களால் ஆன்மா அமைதி நிலையை நாடுகின்றது. அலைந்து திரியும் மனத்தை அங்ஙனம் அலையவிடாமல் நிலைநிறுத்தும் நிலை ஏற்படுகின்றது. அதாவது, மெய்விளக்க அறிஞர்கள் குறிப்பிடும் கைவல்யநிலை (ஆன்மாதுபவம்) உண்டாகின்றது. இந்த யோகத்தினால் தன் ஆன்மா இன்னது என்று தனக்குப் புலனாவதுபோல எல்லாச் சீவர்களிடமும் ஆன்மா என்று ஒன்று இருப்பது தட்டுப்படுகின்றது. எல்லா ஆன்மாக்களும் சமம் என்ற உண்மையும் பளிச்சிடுகின்றது.