பக்கம்:வைணமும் தமிழும்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

வைணவமும் தமிழும்


அவற்றை நம்பாமல் உன்னைச் சரண் புகுகின்றேன். காத்தருள்க’ என்று வேண்டுவதைப் பாசுரத்தில் கண்டு மகிழலாம். இதே ஆழ்வார்,


          கல்தேன் பாய்ந்தொழுகும்
              கமலச்சுனை வேங்கடவா!
          அற்றேன் வந்தடைந்தேன்
              அடியேனையாட் கொண்டருளே - பெரி.திரு. 1.9;9

      [அற்றேன்-உனக்கு அற்றுத் தீர்ந்தேன்]


என்று திருவேங்கடமுடையானையும் சரண் அடைவதைக் காணலாம்.இவர் திருக்கண்ணபுரத்துக் கருமணியிடமும் சரண் அடைவதை "அம்மானை அமுதத்தை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே" (8.9:2) என்று பாசுர அடியால் அறியலாகும்.

சரணாகதி தத்துவத்தின் தந்தை போன்றவர் பிரபந்நர்களின் தலைவரான நம்மாழ்வார். அவர் தம்முடைய திருவாய் மொழியில் "நம்பெருமான் அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” (591) என்றும், “கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்"(5.8:11) என்று அறிமுகப்படுத்திக் கொள்ளுகின்றார். “எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந் தாய்"(5.7:10) என்று எம் பெருமான் தனக்குச் சரணாக அமைந்தமையையும், “உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே" (610:10) என்று தாம் எம்பெருமான் கழலிணைகளில் சரணாகப் புகுந்தமையையும் புலப்படுத்துகின்றார். இவ்விடத்தில்,