பக்கம்:வைணவ உரைவளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 73 முற்றும் நிறைவாகப் பேசவல்ல பிரபந்தம் ஒன்று கூட இல்லை; அப்படிப்பட்ட பிரபந்தம் ஒன்று அவதரிக்க வேணு மென்று நாம் எல்லாரும் கூடி எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேணும்' என்று பேசி எழுந்து போனார்களாம். அவர்களே திருவாய்மொழி அவதரித்த பின்பு மறுபடியும் ஒரு பேரவை கூட்டி எம்பெருமானுக்கு இன்னமும் குண விக்கிரக விபூதிகள் உண்டாக வேணும்' என்றார்களாம். உள்ள குண விக்கிரக விபூதிகளையெல்லாம் திருவாய் மொழியில் பேசி முடித்து விட்டார் ஆழ்வார்-என்பது இதன் கருத்து. 'இன்பம் தலை சிறப்ப : இங்கு ஈடு; திருவாய்மொழி அவதரித்த பின்பு அவனுக்குக் குண விபூதிகள் போராது" என்று இருந்த இழவு தீர்ந்து அத்தால் நிரதிசயாநந்தி களாக' என்பது. திருவாய்மொழி அவதரிப்பதற்கு முன்பு எம்பெருமானுக்குள்ள குண விபூதிகளுக்குத்தக்க பிரபந்தம் ஒன்று அவதரிக்கவில்லையே' என்று இழவு பட்டிருந் தார்கள். திருவாய்மொழி அவதரித்த பின்பு அந்த இழவு தீர்ந்து, எம்பெருமானுக்கு குண விக்கிரக விபூதிகள் போராது என்று இழவுற்றாராயினர் - இதுவே நம் பிள்ளையின் திருவுள்ளம். அதாவது, திருவாய்மொழி அவதரித்த பின்பு எம்பெருமானுக்கு குண விபூதிகள் போராதென்று நினைத்து, முன்னிருந்த இழவு தீரப் பெற்ற தாகக் கொள்ளவேணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/100&oldid=920700" இலிருந்து மீள்விக்கப்பட்டது