பக்கம்:வைணவ உரைவளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வைணவ உரைவளம் வந்து பிறந்து துரது சென்றான்; கூடித்திரியன் என்று: நிச்சயிக்கில் தூது போக விடமாட்டார்களென்று அத்தை மறைத்து வளர்ந்தான் காணும்; அபிவிக் தக்ஷத்திரிய குலத் திலே பிறந்தால் துரது போ' என்று ஒருவருக்கும் நா எழாதிறே' என்றருளிச்செய்தாராம். இந்த சம்வாதத்திற்கு. இந்தப் பாசுரம் மூலமாயிருக்கும். 29 வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை விழுமிய முனிவரர் விழுங்கும் கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக குவலயத் தோர்தொழு தேத்தும் ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும், மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே" (வேதம்-வேதசொரூபியானவன்; வேதத்தின் பயன்-வேதத்தில் நுவலப் பெற்றுள்ள கருமங்: களின் பலன்களைக் கொடுப்பவன்; விழுங்கும் -அநுபவிக்கும்; கோது-குற்றம்; இன்கனிஇனிமையான கனிபோன்றவன், நந்தனார் களிறு-நந்தன் வயிற்றில் பிறந்த ஆனைக் கன்று போன்றவன்; குவலயத்தோர்பூமியிலுள்ளோர்; ஏத்தும்-துதிக்கும்; ஆதிஜகத் காரண பூதன்; ஆள் - அடிமை: ஒப்பவர்ஒப்புடையவர்; கண்டேன்-சேவிககப் பெறறேன். 3. பெரி. திரு. 2.3:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/111&oldid=920712" இலிருந்து மீள்விக்கப்பட்டது