பக்கம்:வைணவ உரைவளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வைணவ உரைவளம் குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லுகின் தாள்கயங் திருந்த இவளைஉன் மனத்தால் என்கினைந் திருந்தாய் இடவெங்தை எங்தை பிரானே!" rதிவளும் ட பிரகாசிக்கின்ற; மதி - சந்திரன்: திருமுகம்-அழகிய முகம்; அரிவை-இளம் பருவமுள்ளவள்; அவள்-பெரிய பிராட்டி யார் ஆகம்-மார்பு: குவளை-நீலோற் பலம்; பாவை-பதுமை, ! தாய்ப் பாசுரம் : பெருமானே, பெரிய பிராட்டியார் நின்திருமார்பில் எழுந்தருளியிருப்பதை அறிந்திருந்தும், உன்மீது ஆசை வைத்திருக்கின்றாள். இப்பெண் விஷயத் தில் என்ன நினைத்திருக்கின்றாய்? ஏற்றருளத் திருவுள்ள மா? அல்லது ஏற்றருளாதிருக்கத் திருவுள்ளமா?' என்று திருத்தாயார் திருவிட எந்தை எம்பெருமானை வினவு கின்றாள். திருவிட எங்தை : திருவினை இடப்புறத்துத் தாங்கிக் கொண்டிருப்பதால் இந்த எம்பெருமான் திருவிட எந்தை' என்று வழங்கப்பெறுகின்றார். எம்பெருமான் திருநாமமே திவ்விய தேசத்திற்கும் ஏற்பட்டுவிட்டது. இந்த எம்பெரு மான் திருமங்கையாழ்வாரின் திருவுள்ளத்தை மிகவும் கவர்ந்தவராகக் காணப்பெறுகின்றார். திருமலைக்குச் சென்று ஏழுமலையானை மங்களாசாசனம் செய்யும் பொழுதும் இவர் இந்த ஆழ்வாரின் திருவுள்ளத்தில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். "ஏத்துவார்தம் மனத்துள் ளான்,இட வெங்தை மேவிய எம்பிரான் தீர்த்தர்ேத் தடம்சோலை சூழ்திரு வேங்க டம் அடை நெஞ்சமேே என்ற திருப்பாசுரப் பகுதியால் இதனை அறியலாம், Tபெரி. திரு. 2.7:1 20. டிெ 1.8:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/131&oldid=920734" இலிருந்து மீள்விக்கப்பட்டது