பக்கம்:வைணவ உரைவளம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வைணவ உரை வளம் அளவும் நாடோறும் திருமணம் புரிந்துகொண்டபடியால் வராகமூர்த்திக்கு கித்திய கல்யாணப் பெருமாள் என்ற மறு திரு நாமமும் ஏற்பட்டது. பெருமாளுடைய திருக்கோயி லானதால் கித்திய கல்யாணபுரி என்ற ஊருக்கு மறுபெயரும், பெரிய பிராட்டியார் அவதரித்த இடமாதலால் நீபுரி என்ற பெயரும், எம்பெருமான் வராக வடிவத்துடன் சேவை சாதிக்கிறபடியால் வராகபுரி என்ற பெயரும் வழங் கலாயின. அந்த 360 கன்னிகையருள் முதல் கன்னிகையின் பெயர் கோமளவல்லி என்பது. ஆகவே, இங்குத்தனிக் கோயில் கொண்டுள்ள தாயாருக்குக் கோமள வல்லி நாச்சியார் என்ற திருநாமமும் ஏற்பட்டது. பிராட்டியாரை இடப்பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பதால் எம் பெருமான் திருவிடங்தை என்ற திருநாமமும் பெறுகின்றார். கொல்லியம்பாவை : வல்லில் ஓரி' என்ற சிற்றரச னுக்கு உரியதாய்க் கொல்லி என்னும் பெயர் கொண் . தான மலையின்கண்ணுள்ள ஒருபெண்பாற் பிரதிமை. இது தேவசிற்பியால் அமைக்கப்பெற்ற அழகிற் சிறந்த பதுமை யாகும். அம்மலையிலுள்ள தேவரையும் முனிவரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் இப்பதுமை யின் இரிப்பைக் கண்டு மயங்கி உயிர் துறப்பார்களாம் (சித்திரமடல்). அசுரரும் அரக்கரும் அங்கு அணுகும் போது அவர்களது வாடைபட்டவுடனே இது தானே நகை செய்யுமாறு பொறியுள் வைக்கப்பட்டதென்பர். இப்பாவை கண்டார் உள்ளமும் விழியும் கவர்ந்து பெருங்காம வேட்கை உறுவித்து இறுதியில் கொல்லு மென்றும் கூறுவர். இது தெய்வநிர்மாணம் என்ப. ஒரு காலத்தில் திருமகள் தன்முன் போர்க்கெழுந்த அவுணர் மோகித்துவிழும்படி இக்கொல்லியம்பாவை உருக்கொண்டு ஆடினள் என்பதை, செருவெங் கோலம் அவுணர் கிங்கத் திருவின் செய்யோள் ஆடிய பாவையும்" 21. சிலப். கடலாடு, அடி(60. 61)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/133&oldid=920736" இலிருந்து மீள்விக்கப்பட்டது