பக்கம்:வைணவ உரைவளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 வைணவ உரைவளம் தீங்கரும்பு : இங்குத் தீங்கரும்பாகச் சொன்னது திருக்கோவலூர்ப் பெருமானையே; குழாவரி வண்டிசை பாடும் பாடலாவது மூன்று திருவந்தாதிகள். இந்த அந்தாதிப் பாடல்களின் இசை கேட்டு திருக்கோவலூர் தீங்கரும்பு (இறைவன்) கண்ணுறங்குமாம். வண்டுகளை ஆழ்வார்களாகக் (மூன்று ஆழ்வார்கள்) கொள்ளலாம். ஐதிகம்: மூன்று ஆழ்வார்களைக் கரும்பினைப் பிழியும் மூன்றுஆலை உருளைகளாகவும், அவர்களால் நெருக்குண்ட எம்பெருமானைக் கரும்பாகவும், அந்த எம்பெருமானின் செளலப்பிய குணத்தைச் சாறாகவும் வேதாந்த தேசிகர் குறிப்பிட்டுள்ளமை" ஈண்டு நினைவு கூர்ந்து மகிழத் தக்கது. இச் சுலோகத்திற்கு மேற்குறிப்பிட ஆழ்வார் பாசுரம் அடிப்படையாக அமைந்திருத்தல் வேண்டும். மூன்றாம் பத்து 4 இருந்தண் மாநிலம் ஏனம தாய்வளை மருப்பினி லகத்தொடுக்கி கருந்தண் மாகடல் கண்துயின் றவனிடம் கமலகன் மலர்த்தேறல் அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளியம் பொழிலூடே செருந்தி நாள்மலர் சென்றணைந் துழிதரு திருவயிந் திரபுரமே! (இருதண் மாநிலம்-மிகக்குளிர்ந்த பெரியபூமியை: ஏனம்-பன்றி, வளை மருப்பு - வளைந்த SMMSMMSMMSMMSMSMSMS 87. தேஹளிச ஸ்துதி. சுலோகம்-7 1. பெரி. திரு. 3.1:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/141&oldid=920745" இலிருந்து மீள்விக்கப்பட்டது