பக்கம்:வைணவ உரைவளம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 137 உறையும் இடம் திருநாங்கூர் மணிமாடக் கோயில்' என்கின்றார் ஆழ்வார். நெருவில்...மாறு காங்கூர் : இப்படிப்பட்ட வீதிகளில் குறப்பெண்டிர் அவலிலையாடிக் கிடைக்கிற நன்முத்து களைக் கூடை கூடையாகக் கொணர்ந்து நாழி நெல்லுக்கு விற்பனை செய்கின்றார்களாம். தொனிப்பொருள்: இஃது அவ்விடத்து நிகழ்ச்சியைக் கூறு வதாயினும், இதனால் ஓர் அர்த்தம் தொனிக்கும்; கடலிலே வலைவீசி மீன் பிடித்து வாழ்வான் ஒரு செம்படவன். ஒரு நாள் அவன் மீன்களிடையே விலையுயர்ந்த இரத்தினம் ஒன்று கிடைக்கல் பெற்றான்; அதனுடைய மதிப்பை அவன் அறியமாட்டாதவனாதலால் அந்த இரத்தினத்தைக் கொண்டுபோய் ஒரு வணிகனிடத்தில் மிகக் குறைந்த விலைகூறி விற்றுவிடுகின்றான்; அந்த வணிகன் இரத்தினத் தின் மதிப்பை நன்கு உணர்ந்தவன்; வாணிகமே பிழைப் பாக உடையவன். அவன் அதைக் கொண்டுபோய் ஒரு மாமன்னனிடப் சரியான அதற்குள்ள விலைகறி விற்று விடுகின்றான்; பிறகு அந்த மன்னன் அந்த இரத்தினத்தை விற்பனை செய்ய நினையாமல் அதனைப் பெரியதொரு மாலையில் இணைத்துக் கொள்ளுகின்றான். ஆக, இச் செய்தியில் ஒர் இரத்தினத்திற்கே மூன்று தன்மைகள் உண்டாகின்றன. அற்ப விலைக்கு மாறுதல், உள்ள விலைக்கு மாறுதல், விலைக்கு ஆட்படாமல் சுய அநுபவற் திற்குக் கொள்ளப்படுதல் என மூன்று வகைகள் ஒன்றுக்கே அதிகாரி பேதத்தால் கூடுவதுபோல் நாம் செய்யும் மிக நற்செயல்கட்கும் இங்ங்னே மூன்று தன்மைகள் கூடும். இரத்தினத்தின் மதிப்பை அறியமாட்டாது அதனை அற்ப விலைக்கு விற்கும் செம்ப டவன் போல், பிரபத்தியின் சீர்மையை அறியமாட்டாத சிற்றறிவாளர் பிரபத்தியைக் கொண்டு ஐசுவர்ய கைவல்யம் போன்ற கீழான பலனை கொள்வர்; இரத்தினத்தை குறைந்த விலைக்குக் கொடா மல் தகுந்த விலைக்குக் கொக்கும் வணிகனைப் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/162&oldid=920768" இலிருந்து மீள்விக்கப்பட்டது