பக்கம்:வைணவ உரைவளம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வைணவ உரைவளம் தனை முடியச் செய்தவனுமான எம்பெருமான் கோயில் கொண்டிருக்கும் ஊர் நறையூராகும். விறல் வியூகம்...விமலனூர் : இதில் குறித்த இதிகாசம் : பாரதப் பெரும்போரில் பதின்மூன்றாம் நாள் நடைபெற்ற போரில் அருச்சுனனின் அருமை மகன் அபிமன்யுவை துரியோ தனின் உடன்பிறந்தவள் கணவன் (சிந்துக்கோன்) சயத் திரதன் கொன்றான். அங்ங்ணம் கொன்ற சயத்திரதனை மற்றைநாள் பகலவன் மறைவதற்குள் தான் கொல்லா விடில் தீப்பாய்ந்து உயிர் விடுவதாக அருச்சுனன் சபதம் செய்தான். இதனையறிந்த பகைவர்கள் பதினான்காம் நாள் பகல் முழுவதும் சயத்திரதனை வெளிப்படுத்தாமல் சேனையின் நடுவே ஒரு நிலவரையில் மறைத்து வைத்திருந் தனர். அருச்சுனனுடைய சபதம் பொய்த்துவிடுமே என்று சிந்தித்த கண்ணன் பகலவன் அவன் மறைவதற்குச் சில நாழிகைக்கு முன்னமே தன் திருவாழியால் மறைத்து விட்டான். அப்பொழுது எங்கும் இருளடைந்ததால் அருச்சுனன் தீப்பாயத் தொடங்கினான்; அதனை எக்களிப் போடுகாண்பதற்குத் துரியோதனா தியருடனே சயத்திரதன் எதிர் வந்து நின்றான். அச்சமயத்தில் கண்ணன் திரு வாழியை வாங்கினான்: பகலாயிருந்ததனால் உடனே பார்த்தன் சயத்திரதனைத் தலை துணித்துக் கொன்றான் என்பது வரலாறு, 64 கொழுங்கயலாய் நெடுவெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடு அண்டத் தப்பால் எழுந்தினிது விளையாடும் ஈசன் எந்தை இணையடிக்கீழ் இனிதிருப்பீர் இனவண் டாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/181&oldid=920789" இலிருந்து மீள்விக்கப்பட்டது