பக்கம்:வைணவ உரைவளம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 183 கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த' என்றும்’ பொய்ம்மாய மருதான அசுரரை என்றும் பெரியாழ் வாரும் அருளிச் செய்தார். 8O வாயெடுத்த மந்திரத்தால் அந்தணர்தம் செய்தொழில்கள் தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும் தாயெடுத்த சிறுகோலுக்கு உளைந்தோடித் தயிருண்ட வாய்துடைத்த மைந்தனுக்கு இழந்தேன்.என் வரிவளையே." (வாயெடுத்த-உரக்க உச்சரிக்கப்படும்; தி எடுத்து-அக்கினி காரியங்களைக் குறைவறச் செய்து; மறை வளர்க்கும்-வேத மரியாதை யை ஓங்கச் செய்யும்; தாய்-யசோதை: உளைந்து ஒடு-அஞ்சி ஒடிச் சென்று) மகள் பாசுரம் : திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி யிருப்பவனும், கிருஷ்ணாவதாரத்தில் தான் செய்த தீம்பு கட்குச் சீற்றம் கொண்ட யசோதைப் பிராட்டி அடிப்ப தாகக் கையிற் கோலை எடுக்க, அதற்கு அஞ்சி ஒடும் போது, எதிர்க்கப்படுபவர்கள் வாயில் தயிருண்ட சுவடு இருப்பதைக் காட்டி, நீ தயிர் களவு கண்டாயன்றோ?' என்பார்களேயென்று அதை மறைப்பதற்காக அத்தயிர்ச் சுவட்டைத் துடைக்கப் புகுந்து தயிரை முகம் முழுதும் 3.1:3 பெரி. திரு. 8.3:5 7. കി. 2.8:1 8. ബ്ലൂ. 9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/208&oldid=920818" இலிருந்து மீள்விக்கப்பட்டது