பக்கம்:வைணவ உரைவளம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 1 99 செய்துவிட்டு பிரசாத பாரணைக்காக துர்வாச முனிவரை எதிர்பார்த்திருந்தான். தாமதித்து வந்த முனிவர் தம்மை அவமதித்து அரசன் தீர்த்த பாரணை செய்துவிட்டதாகக் கருதி மிகுந்த சீற்றங் கொண்டு தம் தலையிவிருந்து ஓர் சடைமயிரைக் களைந் தெடுத்து அதனால் காலாக் நி யோடொத்த ஒரு பெண் பூதத்தை உண்டாக்கி அம்பரீஷனை நலியுமாறு ஏவினார். மிகப் பயங்கரமாய்த் தன்னை நோக்கி விசைத்து வருகின்ற அதனைக் கண்டும் அம்பரீஷன் சிறிதும் மனங்கலங்காது எம்பெருமானையே சிந்தித்திருந்தான். இவனுடைய பாதுகாவலின் பொருட்டு மாளிகையில் நிறுவப் பெற்றிருந்த சக்கரத்தாழ்வான் அந்தப் பூதத்தை நீறாக்கி விட்டது மல்லாமல் துர்வாச முனிவரையும் தொடரத் தொடங் கியது. முனிவர் எத்திசையும் உழன்றோடியும் புகல் பெறாமல் திருமால் திருவடிகளில் வந்து விழ, சீமந் நாரா யணனும் அம்பரீஷர் திருவடியே உமக்குப் புகல்' என்று காட்டிக் கொடுக்க, முனிவரும் அரசனையே சரணம் புகுந்து உயிர் பிழைத்து வாழ்ந்தார். ஒன்பதாம் பத்து 88 வில்லால் இலங்கை மலங்கச் சரம்துரந்த வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும் எல்லாரும் என்றன்னை யேசிலும் பேசிடினும் புல்லாணி யெம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே.” 1. பெரி. திரு, 9.4:5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/224&oldid=920836" இலிருந்து மீள்விக்கப்பட்டது