பக்கம்:வைணவ உரைவளம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 2.05 களை நைகின்றான். தேவர்கள் அந்த அசுரனை முடிப்ப தற்கு வேண்டிய உபாயத்தை ஆலோசிப்பதற்குத் தகுதி யானதும் ,திருப்பாற் கடலைப்போலவே ஆலோசிப்பதற்கு ஏகாந்தமானமாயும், பாற்கடலில் ஆதிசேடன்மீது அறி துயில் கொள்ளும் பரந்தாமனைப் போலவே, இத்தலத்து எம்பெருமானும் சேஷசாயியாயும் இருந்தபடியால் மும் மூர்த்திகளும் தேவர்களும் சூழ்ந்து ஆழ்ந்து ஆலோசிக்க இவ்விடத்தைத் தேர்ந்து எடுத்து ஒன்று கூடுகின்றனர். திருமால்; நரசிங்க அவதாரம் எடுத்துத் தன் வள்ளுகிரால் இரணியனை வதைப்பது என்று முடிவு செய்கின்றனர். தேவர்கள் யாவரும் கோஷ்டியாகச் (கூட்டமாகச்) சேர்ந்து ஆலோசித்த இடமாதலின் இதனைக் கோஷ்யூர் என்று வழங்குகின்றனர். திரு' என்ற அடையுடன் இவ்வூர் 'திருக்கோட்டியூர்' என்று திருநாமம் பெற்று வழங்க லாயிற்று.

பெயர்க் காரணம்பற்றி நம் யுக்தியும் செயற்படு கின்றது. திருக்கோட்டியூர்' என்பதைத் திருக்கு + ஒட்டி + ஊர் எனப் பிரித்து பிறவியில் செய்த வினைகளை பு நீக்கும் எம்பெருமான் + கோயில் கொண்டுள்ள தலம்" என்று நம் மனம் எண்ணிப் பொருள் காண்கின்றது. மேலும், கோட்டம்-கோயில்; கோயிலையும் விமானத் தையும் கொண்ட ஊர் என்று பொருள்கொள்ளவும், முயல் கினறது. இன்னும், கோஷ்டி-கூட்டம்; வித்துவான்கள் கூட்டம் நிறைந்திருக்கும் ஊர்' என்று பொருள் காணவும் முற்படுகினறது.'"

சைவப்பற்றும் திருமால் வெறுப்பும் கொண்ட சோழ அரசனது கொடுமையினால் திரு வரங்கம் பெரியகோயிலில் பூரீவைணவ ஆசாரியர்கள் அச்சமின்றி வாழ்வதற்கு இயலாத காலத்தில் கூரத்தாழ்வானும் அத்தலத்தைவிட்டுச் சிலகாலம் திருமாலிருஞ் சோலையில் வாழ்ந்ததுபோல, 8. பாண்டி நாட்டுத் திருப்பதிகள்-பல்,81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/230&oldid=920843" இலிருந்து மீள்விக்கப்பட்டது