பக்கம்:வைணவ உரைவளம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 வைணவ உரைவளம் பின்னே சொல்ல பிராப்தமாயிருக்க, தமிழை முன்னே சொன்னதற்குக் காரணம் என்? எனில்: தமிழ் வேதமானது வடமொழி வேதம்போலல்லாமல் சர்வாதிகாரமாயிருத்த லாலும், செய்யதமிழ் மாலைகள் நாம் தெளிய ஒதி தெளியாத மறைநிலங்கள் தெளிகின் றோமே? என்ற வேதாந்த தேசிகரின் திருவாக்குப்படி தெளிவாகப் பொருள்களை விளக்குதலாலும், ஸ்வரூபத்திற்குச் சேர்ந்த வையும் சேராதவையுமாகிய கண்ட பொருள்களையும் பேசுகின்ற வடமொழி வேதம் போலல்லாமல், ஸ்வரூபத் திற்குச் சேர்ந்தவற்றையே பேசுதலாலும் இன்னமும் இப்படிப் பட்ட தனிச் சிறப்பைக் கொண்டு சமஸ்கிருத வேதத்தினும் தமிழ் வேதம் சிறந்ததென்பது விளங்க முந்துறச் சொல்லப் பட்டதாகக் கொள்க. இன்னும் வட மொழி முரட்டு சமஸ்கிருதம்' என்று பேர் பெற்றிருக்கும்; இஃது அங்ங்னமல்லாமல் ஈரத்தமிழ்" என்றும் செவிக்கினிய சொல்' என்றும் சிறப்புறுதல்பற்றி செந்திறத்த' என்று சிறப்பிக்கப்பட்டது. ஐதிதம்-1. இந்நூல் பாசுரம் 183. (திருவாய்.5.8:7) இல் காண்க. ஐதிகம்-2 இந்நூல் பாசுரம் 244 (திருவாய். 9.2:8) இல் காண்க. 1O4 கீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்! நிலாத்திங்கள் துண்டத்தாய் கிறைந்த கச்சி ஊரகத்தாய்! ஒணதுறைகீர் வெஃகா வுள்ளாய்! உள்ளுவார் உள்ளத்தாய், உலக மேத்தும் 2. தே.பி. 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/247&oldid=920863" இலிருந்து மீள்விக்கப்பட்டது