பக்கம்:வைணவ உரைவளம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 4 வைணவ உரைவளம் ளாக மதியாமல் இவையெல்லாவற்றாலும் தாழ்ந்தவ. ராகத் தம்மைக் கருதியிருந்த விதுரருடைய திருமாளிகை யிலே தானாகவே சென்று அமுது செய்தருளினான் கண்ண பிரான். ஆகவே பள்ளத்தையோடிப் பெருங்குழியே தங்கும் இயல்பு ஒக்கும். (2) நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாது; அப்படியே எம்பெருமானின்றி ஒரு காரியமும் ஆகாது. ஒருவன் விரும்பினதை வேறொருவன் விரும்பாதபடி உலகம் வெவ். வேறு விருப்பத்தையுடையதாயினும் எல்லோரும் நீரை விரும்பியேயாக வேண்டும்; அதுபோலவே எம்பெருமா னையும். (3) நீருக்குக் குளிர்ச்சி இயற்கை; சூடு வந்தேறி. எம் பெருமானுக்கும் தண்ணளி இயற்கையாய்ச் சீற்றம் வந்தேறியாயிருக்கும். "நீரிலே நெருப்புக்கிளருமாப்போல குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்: தால்' என்ற முமுட்சுப்படி திவ்விய சூக்தி காண்க. (4) நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேண்டும். தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை' என்றார் குலசேகரப் பெருமாள். (5) நீர் நம் விருப்பப்படி தேக்கி வைக்கவும் ஒட விடவும் உரியதாயிருக்கும். எம்பெருமான் இயல்பும் அப்படியே; ஆண்டாள் தான் சூடிக் களைந்த மாலையிலே விலங்கிட்டு வைத்துப் புசிக்க நின்றான் எம்பெருமான். பாண்டவர்கட்காகக் கழுத்திலே ஒலைகட்டித் தூது, நடந்தான். 4. முமுட்சு-127. 5. பெரு.திரு. 5:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/249&oldid=920867" இலிருந்து மீள்விக்கப்பட்டது