பக்கம்:வைணவ உரைவளம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 2霍莎 (6) நீரானது மற்ற பண்டங்களைச் சமைப்பகற்குக் கருவியாயுமிருக்கும்: தனிப்படத் தானே குடிக்கத்தக்கது மாயிருக்கும். எம்பெருமானுக்கும் உபாயத்துவம் உபயேத் துவம் என்ற இரண்டு தன்மைகள் உண்டல்லவா? எம்பெரு மானைக் கொண்டு வேறு பலன்களைப் பெறவிரும்புவாரும் எம்பெருமான் தன்னயே புருஷார்த்தமாகக் கொள்வாகும் உள்ளமை காண்க, (7) அன்னம் முதலானவை தமக்குப் பிரதிநிதிகளைச் சகிக்கும்; அதாவது காய்கனி கிழங்கு வேர் பலா முதலிய வற்றால் உடலைப் பாதுகாக்கலாம்: நீரானது அப்படி பிரதிநிதியொன்றையும் சகிக்க மாட்டாது; நீருக்கு நீரே வேண்டும். அப்படியே எம்பெருமானுக்கும் பிரதிநிதி கிடையாது: குணாதுசந்தாநத்தாலும் போது போக்குதல் அரிது. ஒரு நாள் காண வாராயே" அடியேன் தொழ வந்தருளே' என்று பிரார்த்தித்துப் பெற்றே தீர வேண்டும். (8) சோறு உண்ணும்போது நீர் இல்லாமல் முடியாது: அப்படி நீர்வேறொன்றை விரும்புவதன்று. எம்பெருமானும் அப்படியே; உபயாந்தரங்களுக்கு எம்பெருமான்வேண்டும்; எம்பெருமான் இவற்றை விரும்பாதவன். 'உன்னலல் லால் யாவராலும் ஒன்றுங் குறை வேண்டேன்' (9) கொள்ளும் பாத்திரங்களின் வேறுபாடின்றி நீர் தான் குறைய நில்லாது; எங்கும் நிரம்பியிருக்கும். எம்பெரு மானும் கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் வள்ளல்" கொள்வார் குறையேயத்தனை. ஐசுவரியமே போதும் என்பாரும் கைவல்யமே போதுமென் பாருமாகக் குறையக் கொள்வார் குற்றமேயாகும். & . திருவாய்.8.5;1 7. டிெ. 5.7:6 8. டிெ, 5.பி:3 ,ே டிெ. 3.9:5 வை,-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/250&oldid=920870" இலிருந்து மீள்விக்கப்பட்டது