பக்கம்:வைணவ உரைவளம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய் மொழி 243 கும் காலத்தில் பொருள் தேடும் விருப்பினால் வெளிநாடு சென்றான்; அவளும் கருவுயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தந்தையின் வாணிகமே தொழிலாகப் பொருள் தேடப் போனான்; இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக் கொண்டு வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது அவ்விருவருக்கும் இடம் போதாமை யால், அம்பறுத்து எய்ய வேண்டும்படி விவாதமுண்டான சமயத்தில், இருவரையும் அறிவானொருவன் வந்து, ‘இவன் நின் தந்தை; நீ இவன் மகன்' என்று அறிவித்தால் கீழ் இழந்த நாட்களுக்குச் சோகித்து இருவர் சரக்குமொன் றாய், அவன் காப்பாற்றுகின்றவனாய், இவன் காப்பாற்றப் படும் பொருளாய்க் கலந்து விடுவார்களன்றோ? அது போன்று 'சீவான்மாவும் பரமான்மாவும் உடலாகின்ற ஒரு மரத்தைப் பற்றியிருந்தால் ஒருவன் இருவினைப் பயனை நுகரா நிற்பன்: ஒருவன் நுகர்வித்து விளங்கா நிற்பன்; அவன் ஏவுகின்றவன்: நாம் ஏவப்படும் பொருள்' என்னும் முறையறிவே பொருந்தலாமன்றோ? ஒர் அரச குமாரன் பூங்கா ஒன்றினைக் கண்டு புக அஞ்சினால், இஃது உன் தந்தையினுடையது காண்!" என்னவே, நினைந்தபடி நடந்து கொள்ளலாமன்றோ? ஆன பின்னர், அவனுடைய உடைமை இவையெல்லாம்" என்னும் நினைவே வேண்டுவது; தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம் என்கின்றார். 1 * * ஒடுங்க அவன்கண் ஒடுங்கலும் எல்லாம் விடும்பின்னும் ஆக்கை விடும்பொழு தெண்ணே.' 14. இருக்கு வேதம். 15. திருவாய் 1.819

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/266&oldid=920903" இலிருந்து மீள்விக்கப்பட்டது