பக்கம்:வைணவ உரைவளம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 வைணவ உரைவளம் (ஒடுங்க-சென்று சேர; அவன்கண்...எம்பெரு மான் பக்கலில்; எல்லாம் ஒடுங்கலும்(ஆன்மாவை) ஒடுங்கப் பண்ணுவதான அவித்யை முதலானவையெல்லாம்; விடும்நீங்கும்: பின்னும் - அதற்குப் பிறகு; ஆக்கை-உடல்; விடும்பொழுது-தொலை யும் நாளை; எண்-எதிர்பார்த்திருப்பது) உலகிற்கு உபதேசம் கூறும் திருவாய்மொழியில் உள்ள ஒரு பாசுரம் இது. இதில் ஆழ்வார், அவ்விறைவனிடத் தில் சென்று சேரவே, உங்களிடத்தில் வந்து சேர்ந்திருக் கின்றனவெல்லாம் தாமாகவே விட்டு நீங்கும்; அதற்கு மேல், உயிரானது உடலைவிட்டு நீங்கும் காலத்தை எண்ணி இரு" என்கின்றார். செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்தவர்கள் எம்பெருமானையே பற்றுக்கோடாகப் பற்றின அடியார் களேயாவர். இங்கு ஒர் ஐதிகம். ஒர் அயனத்தினின்று குன்றத்துச் சீயர் எம்பெருமானார் ரீபாதத்தில் புக, அவருடைய சிறு பேரைச் சொல்லி, சிங்கப்பிரான்! இன்று அயனங்காண்’ என்ன, திருவுள்ளத்தில் ஒடுகின்றது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாதிருக்க, உயிர் உடலை விட்டு நீங்கும் அந்திக் காலத்தில் பலம் கண்ணழி வற்ற பின்பு நடுவு விரோதியாய் செல்லுகிற நாளில் ஓராண்டு கழியப்பெற்ற இஃது உனக்கு ஒன்றாய் யிருந்த தில்லையோ!' என்று அருளிச் செய்தார். இஃது, உயிர் உடலை விடுகின்ற காலத்தை எண்ணிக் கொண்டிருந்ததற்கு ஐதிகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/267&oldid=920905" இலிருந்து மீள்விக்கப்பட்டது