பக்கம்:வைணவ உரைவளம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 345 112 எண்பெருக் கங்கலத்து ஒண்பொருள் ஈறில வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே.: (எண்பெருக்கு-அளவிறந்த; அநலத்து-அப்படிப் பட்ட ஞானம் முதலிய குணங்களையுடைய, ஒண்பொருள்-சிறந்த பொருளாகிய ஆன்ம வர்க்கத்தையும், ஈறு-முடிவு, வண்புகழ்திருக்கல்யாண குணங்கள்; திண்கழல்-கை விடாத திருவடிகளை; சேர்-ஆச்ரயிப்பது) உலகிற்கு உபதேசம் செய்யும் திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். இதில் ஆழ்வார் எண்ணாலே மிக் கிருப்பனவாய் (மிகப் பலவாய்) ஞானத்திற்கு நிலைக்கள மாய் ஞானமாய் அழிவற்றனவாய் இருக்கின்ற உயிர்களை யும், அழிவற்ற வளவிய புகழ்களையுமுடைய நாராயண னது உறுதியான திருவடிகளைச் சேர்வாய்' என்கின்றார். இப்பாசுரம் திருமந்திரார்த்தம் என்னுமிடம் ஆழ்வா னுடைய இதிகாசத்தினால் நன்கு விளங்கும். அது வருமாறு: அழகிய மணவாளன் திருவருளால் ஆழ்வானுக்கு இரண்டு திருக்குமாரர்கள் அவதரித்தனர். ஆழ்வான் அக்குமாரர் கட்கு நாமகரணம் முதலிய செய்வித்ததற்கு உடையவர் கடவர் என்றெண்ணித் தாம் ஒன்றும் செய்யாதிருந்தார். நம்பெருமாள் திருவருளால் ஆழ்வானுக்கு இரண்டு குமாரர் கள் உதித்ததாகப் பெருமகிழ்ச்சி கொண்டிருந்த உடையவர் அக்குழந்தைகள் பிறந்த பதினோராம் நாளிலே சீடர் குழாத்துடன் ஆழ்வான் திருமாளிகைக் கெழுந்தருளிதி தமது முக்கிய சீடர்களில் ஒருவரான எம்பாரை நோக்கிக் 16. திருவாய் 1.2:10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/268&oldid=920907" இலிருந்து மீள்விக்கப்பட்டது