பக்கம்:வைணவ உரைவளம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 வைணவ உரைவளம் "குழந்தைகளை எடுத்துக்கொண்டு வாரும் என்று கூற, அவர் அங்ங்னமே பிரபந்த குலக் கொழுந்தான அக் குழவி களை எடுத்து வரும்போது கண்ணெச்சில் முதலியன தாக்காதபடி இரட்சையாகத் துவயம் என்னும் மந்திர இரத்தினத்தை அநுசந்தித்து வாழ்த்திக் கொண்டே வந்து குழந்தைகளை எம்பெருமானார்க்குக் காட்டினர். அவர் மிகக் களிப்புடனே ஆனந்தக் கண்ணிர் துளிர்க்கத் தம் திருக் கண்களால் குளிரக் கடாட்சிக்கும்போது அத் தெய்விக சிசுக்களின் ஒளிச் சிறப்பினைக் கண்டு வியப்புக் கொண்டு எம்பாரே! இக்குழந்தைகளிடம் துவயம் பரிமளிக்கின்றதே; இங்ங்ணம் ஆகுமாறு என் செய்தீர்?" என்று வினவினார். எம்பாரும் குழந்தைகட்கக் காப்பாகத் துவய அதுசந் தானம் செய்து கொண்டு வந்தேன்' என்று சொல்ல, உடையவர் அப்படி எம்பார் காப்பிட்டதற்கு உகந்து அவரை நோக்கி, நீர் இக்குழந்தைகள் உய்யும் வகையை நாடிச் செய்ததற்கு முற்பட்டிராதலால் இவர்கட்கு நீரே ஆசாரியராகக் கடவீர்' என்று நியமித்து விட்டார். இக்குமாரர்களிருவருக்கும் ஒரு கால் திருவாய்மொழிப் பொருள் சொல்லிவரும்போது எண்பெருக்கந் நலத்து" என்ற பாசுரத்தளவும் வரப் பணித்து, இப்பாசுரம் வந்த வளவிலே இது திருமந்திரார்த்தத்தை விவரிக்கிறதாதலா லும், மந்திரார்த்தம் ஆசாரியரிடத்தில்தான் கேட்டறிய வேண்டியதாதலாலும் அதனை அவர்கட்குச் சொல்லாது நிறுத்தி இதனை உங்கள் ஆசாரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கள்' என்று சொல்ல, அதனை விரைவில் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் அவாவினால் உடனே அவர் கள் எழுந்து தங்கள் ஆசாரியரான எம்பார் எழுந்தருளி யிருக்கும் இடத்தைக் குறித்துப் போகப் புக்க வளவில், ஆழ்வான் யாக்கை நிலையாமையைத் திருவுள்ளத்திற் கொண்டு அவர்களை யழைத்து, இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்பது தெரியாது: ஆதலால் இருந்து கேளுங்கள் என்று திருமந்திரத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/269&oldid=920909" இலிருந்து மீள்விக்கப்பட்டது