பக்கம்:வைணவ உரைவளம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 வைணவ உரைவளம் திண்மதியை திண்ணியதான மதியைக் கொடுக்கு மவனை என்றபடி. இதிலுள்ள இதிகாசம் : முன்பு அம்பரீடன் எம்பெருமானை நோக்கித் தவம் செய்தான். அவனுடைய திடமான எண்ணத்தைச் சோதிக்கும் பொருட்டு எம்பெருமான இந்திரன் வேடத்தைத் தரித்துக் கொண்டு அவன் எதிரே வந்து நின்று, வேண்டும் வரத் தைப் பெற்றுக் கொள்க' என்று சொல்ல, அது கேட்ட அம்பரீடன், இந்திரனே, நான் உன்னை ஆராதிப்பவன் அல்லன்; என்னுடைய சமாதி பங்கம் பண்ணாது போக மாட்டாயோ? உன்னைக் கும்பிடுகின்றேன, போ' என்றா ாைம். திண்ணிய மதி இப்படி இருக்கும் என்று காட்டியபடி. இறைவன்தானே அழிக்கப் பார்த்தாலும் அழிக்க வொண் ணாதபடியாக இருக்கும் என்றவாறு-இந்த வரலாறு பாசுரம்-169 லும் வந்துள்ளது. T 29 ஆடி யாடி யகங்க ரைந்திசை பாடிப் பாடிக்கண் ணிர்மல்கி எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடுமிவ் வாணுதலே." இது நம்மாழ்வார் நாயகி நிலையிலிருந்து கொண்டு: பேசும்திருவாய்மொழிப் பாசுரம். தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்' என்ற பாவனையில் அமைந்தது. ஒளிபொருந்திய நெற்றியினை யுடைய இவள் நின்றவிடத்தில் நில்லாமல் பலவிடங் களிலும் உலாவி மனமும் கரைந்து, இசையோடு பலகாலும் பாடிக்கொண்டு, கண்களில் நீர் நிறையப் பெற்று எல்லா இடங்களிலும் தேடித்தேடி, நரசிங்கனே! என்று மிகவும்: வாடா நின்றாள்' என்று திருத்தாயார் சொல்லு கின்றாள். 8. திருவாய், 2.4:1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/301&oldid=920981" இலிருந்து மீள்விக்கப்பட்டது