பக்கம்:வைணவ உரைவளம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 வைணவ உரை வளம் 'நரசிங்கா என்று வாடிவாடும்' எனற தொடர் பிரக லாதனைப்போலே ஒரு தம்பம் இல்லாதபடி இருக்கை யாலே கொம்பை இழந்த தளிர்போலே வாடும் முதல் வாட்டம் தளிர் என்று கூறத்தக்கவாறு உள்ளது, அடுத்த மணித்துளியில் வாட்டம், வாடி வாடும்" என்கின்றாள்.' என்ற பொருளைத் தெரிவிக்கின்றது. இன்னும் இத் தொடரில் தமப்பன் பகையானாலோ உதவுவது, நீர் பகையானால் உதவலாகாதோ? ஞான நிஷ்டர்க்கோ உதவுவது, பக்தி நிஷ்டர்க்கு உதவலாகாதோ? ஆண் களுக்கு உதவுவது, பெண்களுக்கு உதவலாகாதோ? சேராத வடிவு சேர்த்து உதவினால் உதவுவது, இருந்தபடியே உதவ லாவார்க்கு உதவலாகாதோ? ஒர் அதிகாரி நியதி, ஒரு கால நியதி, ஒர் அங்க நியதி என்று நிர்ப்பந்தம் வேண்டுமோ இவளுக்கு? இவளுடைய இரட்சணத்திற்கு ஏதேனும் முகம்" பண்ணவேண்டுமோ?" என்ற தொனிப் பொருளும் தோன்றும். மேலும் வாடுவாடும் என் கையாலே முடியும் படியான நிலைமை நேர்ந்த அளவிலும் நப்பாசையினால் உயிரை ஒருவாறு தரித்து வைத்துக்கொண்டு இருக் கின்றமை தோற்றுவிக்கப் பெற்றது. இவ்வாணுதல்-ஒளியுடன் கூடியதுதலையுடைய இவள் இவ்வழகுக்கு இலக்கானார் படுவதை இவள் படுவதே!" என்பாள் வாடும் வாணுதல்" என்கின்றாள். இவள் முடிந் தால், உம்முடைய மேன்மையாலே இன்னம் இப்படிப்பட்ட தொரு வடிவத்தை உண்டாக்கிக் கொள்ளலாம்' என்றிருக் கின்றிரோ? என்பது திருத்தாயாரின் உட்கோள். இந்நிலை யில் இவளை வாணுதல்" என்ன க் கூடுமோ? என்னில்: ஊேனில் வாழ் உயிரில்' கலவியாலுண்டான் புகர் இன்னம் 9. சேராத வடிவு-மனித வடிவும் விலங்கு வடிவும். 10. பிரகலாதனைக் காத்தற்குச் சிங்க முகத்தை அடைந்தது போன்று, இவளைக் காத்தற்கு வேறு முகம் கொள்ளவேண்டாம் என்றபடி. 11. திருவாய், 2.3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/303&oldid=920985" இலிருந்து மீள்விக்கப்பட்டது