பக்கம்:வைணவ உரைவளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் ைெவணவம்,உரைவளத்தால் ஏற்றம் பெற்றது என்றும், சைவம் சாத்திரவளத்தால் சிறப்புற்றது என்றும் பல பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இந்த உண்மை இரண்டு சமயங்களைப்பற்றியும் அறிந்து கொள்ள முயன்ற அடியேனுக்குத் தெளிவாகப் புலனாகின்றது. பின்னதை விளக்க இங்கு இடமில்லை; முன்னதை விளக்குவது இந்நூலுக்கு இன்றியமையாததாகின்றது. திருமால் திருவருளால் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருள்மிக்குப் பாடிய இன்தமிழ் பாக்களே நாலாயிரத் திவ்விய பிரபந்தம். இதனுள் திகழும் திருப்பாசுரங்கள் ஒவ்வொன்றும் செவிக்கினிய செஞ் சொல்லாலாயது: சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்தது: பிறவித்துயரறுத்து அந்தமில் பேரின்பத்தை அளிக்கவல்லது. இவ்வாற்றான் ஒவ்வொரு பாசுரமும் ஒவ்வொரு நூல் எனத் தக்க மாட்சிமையுற்றிருத்தலால் 'நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்' என்று வழங்கலாயிற்று. இவ்வரிய நூல்-ஆழ்வார் அருளிச் செயல், திவ்விய பிரபந்தம், பூரீகோசம் என்றும் வழங்கப்பெறும். இது மக்களின் கீழ்மையை யகற்றி மேன்மையளிக்கும் மறையாய் விளங்குதலின் இதனைத் தென்மொழி மறை' என்பர் சான்றோர். உரையாசிரியர்கள் : திவ்வியப் பிரபந்தங்களையும் அவற்றின் பொருள் சிறப்புகளையும் ஆழ்வாரிடம் நேரில் பெற்று அவற்றை உலகில் பரவச் செய்தவர் நாதமுனிகள். ஆதலின், அப் பெரியாரையே முதல் உரையாசிரியராகக் கொள்வது வைணவ மரபு. அவர் முதலாக வந்த அவ்வுரை உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார் (நாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/32&oldid=921023" இலிருந்து மீள்விக்கப்பட்டது