பக்கம்:வைணவ உரைவளம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 2.93. பேணாமல் நீர் தனியே நின்று நெல் அளக்கிறீரே!” என்ன, “வந்தது என்!" என்ன, ஒன்றுமின்று, கனடு போக, வந்தேன்’ என்ன, ஆகில் ஒரு கோட்டையைக் கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்து விட, அவன் அதனைக் கொண்டு வருகின்ற காலத்தில் எதிரே ஒருவன் வந்து இது பெற்றது எங்கே?' என்ன, உன்தனை மொட்டைத் தலையன் தந்தான்' என்ன, அவன் சென்று அங்கேயுள்ள அவனைக்கண்டு இன்னான் உம்மைவைது போகின்றானே!" என்று அதனைக் கூற, அடா! என் நெல்லையும் கொண்டு என்னையும் வைது போவதே!’ என்று தொடர்ந்து வர, அவன் திரும்பிப் பார்த்து ஏன்தான் குழல்கள் அலைய அலைய ஒடிவாரா நின்றாய்!” என்ன, ஒன்றுமின்று: இன்னும் ஒரு கோட்டை கொண்டு போகச் சொல்ல வந்தேன்' என்றானாம்; அப்படியே, கடலை முகங்காட்டு வித்துக் கொள்ளுகைக்காகக் காலைப் பிடிப்பது கோலைத் தொடுப்பதாக நிற்க, அவன் வந்து முகங்காட்டின வாறே * உனக்கு அம்பு தொடுத்தோம்" என வெட்கி, உன் பகைஞரைச் சொல்லு, நாம் இதனை விட' என்றார் அன்றோ? T 4 O சுமந்து மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் நமன்றெழுந்திரு வேங்கடம் நங்கட்குச் சமன்கொள் வீடு தருந்தடங் குன்றமே." (சுமந்து-ஏந்தி: மாமலர்-சிறந்த பூக்கள்; நீர் தீர்த்தம்; சுடர்-தீபம்; தூபம்-துாபத்தை. யும்; வானவர்-தேவர்: வானவர்கோன் 6. திருவாய். 3.3:7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/322&oldid=921027" இலிருந்து மீள்விக்கப்பட்டது