பக்கம்:வைணவ உரைவளம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 30割 பகம் கொண்டு சாத்துவதற்குக் கடைவீதி ஏறச் சென்றனர். அங்குப் பூவெல்லாம் விற்றுப் போய் ஒரே ஒரு பூ மாத்திரம் மிகுந்திருந்தது. அப் பூவுக்கு ஒருவருக்கொருவர் செருக் காலே விலையை மிக ஏற்ற, அவர்களில் ஒருவன் நினைக்க வொண்ணாதவாறு பொருளை மிகக் கொடுத்து அதனை வாங்கிக் கொண்டு வந்து சாத்தினான்; அன்று இரவில் அவனுடைய கனவில் நீ இட்ட பூ எனக்குக் கனத்துச் சுமக்க முடிகிறதில்லை என்று அருளிச் செய்தானாம். எம்பெருமான். T 4 1 சாதிமா னிக்கம் என்கோ? சவிகொள்பொன் முத்தம் என்கோ? சாதிகல் வயிரம் என்கோ? தவிவில் சீர் விளக்கம் என்கோ? ஆதியஞ் சோதி யென்கோ? ஆதியம் புருடன் என்கோ? ஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் அமல னையே." (சவிகொள்- ஒளியையுடைய; சவிகொள் - நீரோட்டமுள்ள முத்தம்-முத்து; தவிவு இல் சீர்-அழிதல் இல்லாத ஒளியையுடைய ஆதி எல்லாப் பொருள்கட்கும் முந்தி இருப்பதாய்: அம்-அழகிய; சோதி-தேசோமயமான திரு மேனி, ஆதி-தலைவனாகிய அம்-(ஆனந்தம் முதலிய குணங்களால்) இனியவளான: புருடன்-பரமபுருடன், ஆதும் இல் காலத்துயாதொரு உபாயமும் இயலாத காலத்தில்; எந்தை-தந்தை; அச்சுதன்-நழுவவிடா தவன் 1 7. திருவாய் 3, 4, 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/324&oldid=921031" இலிருந்து மீள்விக்கப்பட்டது