பக்கம்:வைணவ உரைவளம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.04. வைணவ உரைவளம் 142 மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு கின்ற கைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன் எம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார் தம்மால் கருமென் சொல்லீர் தண்கடல் வட்டத் துள்ளிரே!' (மொய்-நெருங்கின; மா-பெரிய; சிறைப்பட்டு: கவ்வப்பெற்று, கைமா-யானை சொல்லி பாடி-புகழ்ந்து பாடி: துள்ளாதார்-கூத்தா டாதார்; என்கருமம்-என்ன பயன்: தண்குளிர்ந்த, கடல்வட்டம்-கடல் சூழ்ந்த பூ மண்டலம்) 'திருமாலுக்கு அன்பு செய்தாரை ஆதரித்தலும், அன்பி லாதாரை நிந்தித்தலும் பற்றிய திருவாய்மொழியின் முதற்பாசுரம், இதில் ஆழ்வார், வண்டுகள் மொய்க் கின்ற பூக்களையுடைய சோலையாற் சூழப்பட்ட பொய் கையிலுள்ள முதலையால் பிடிக்கப்பட்டு நின்ற கைம்மா வுக்குத் திருவருள் புரிந்த கார் காலத்து எழுந்த மேகம் போன்ற நிறத்தையுடையவன் கண்ணன் எம்மானான எம் பெருமானைச் சொல்லிப்பாடி எழுந்தும் பறந்தும் துள்ளா தவரால் காரியம் யாது? குளிர்ந்த கடலாற் சூழப்பெற்ற பூமியில் உள்ளவர்களே! நீங்களே சொல்லுங்கள்' என்கின்றார். எம்பெருமானுடைய பேரருள் பொலிவு பெறும் இந்த வரலாற்றை அது சந்தித்தால் மனம்மொழி மெய்கள்விகாரப் 13. திருவாய், 3; 5 : 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/327&oldid=921037" இலிருந்து மீள்விக்கப்பட்டது