பக்கம்:வைணவ உரைவளம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 305 படாதிருக்க வொண்ணுமோ? எம்மானைச் சொல்லிப்பாடி, எழுந்தும் பறந்தும் துள்ளவேண்டும் படியாகுமே அங்ங்ணம் ஆகப் பெறாதவர்கள் இவ்வுலகில் பிறப்பதனாலும் இருப்ப தனாலும் என்ன பயன்? இங்கேகம்பிள்ளைஈடு: “பட்டர் இவ்விடத்தை அருளில் செய்யும்போது, அவன் நூறாயிரம் செய்தாலும் விக்ரு தராகாதிருக்கும்போதும் நாமே வேணும்; நமக்கு ஒரு ஆபத்து உண்டானால் இருந்தவிடத்தில் இருக்க மாட்டாமல் விக்ருதராம்போதும் அவனே வேணும்: என்று அருளிச் செய்தார்' என்பதாம். எம்பெருமானைப் போன்ற பரமதயாளு இல்லை; அவனது தலையில் ஈடுபட மாட்டாத நம்மைப் போன்ற வன்னெஞ்சரும் இல்லை என்றபடி. 143 வம்பவிழ கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்ந்த செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடிச் கும்பிட்டு கட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார் தம்பிறப் பாற்பயன் என்னே சாது சனங்க ளிடையே?4 |வம்பு-நறுமணம்; கோதை-நப்பின்னை; மால் விடை- பெரிய காளை, அடர்ந்த வலி யடக்கிய; திரள்வாய் - திரண்ட இதழை யுடையவன்! தொல் புகழ்- உண்மையான புகழ்: நட்டம் இட்டு ஆடி-கூத்தாடி கோரு -गुछ திருவாய். 3; 5: 4 வை.-20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/328&oldid=921039" இலிருந்து மீள்விக்கப்பட்டது