பக்கம்:வைணவ உரைவளம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 வைணவ உரைவளம் உகட்டு-அடைவுகேடு தலை மண்டையிட்டு: உழலாதார்-திரியாதார்; சாதுசனங்கள்நன் மக்கள்!

  • திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும் பற்றிய திருவாய்மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், நறுமணத்தோடு மலர் மாலையையுடைய நப்பின்னைப் பிராட்டி காரணமாகப் பெரிய இடபங்களேழனையும் கொன்றவன் செம்பவளத் திரள் வாயன், சிரீதரன்; அவனுடைய சுவாபாவிகமான புகழ்களைப்பாடி, வணக்கத்தோடு நடனத்தையும் செய்து திரியாதவர்களுடைய பிறப்பால் நன்மக்கள் நடுவில் என்ன பயன் உண்டு?' என்கின்றார்.
பயன் என்னே சாதுசனங்களிடையே’ என்றவிடத்து ஈட்டு பூரீசூக்தி, திருப்புன்னைக்குக் கீழே ஒருவரிருக்குமிடத்திலே நம்முதலிகள் பத்துப்பேர் கூட நெருக்கிக் கொண்டிருக்கச் செய்தே கிராம ணிகள் மயிரெழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து நெருக்குமாபோலே காண்! என்று அருளிச் செய்வர் பிள்ளைப் பிள்ளை' என்பது.

இதன்கருத்து: திருவரங்கம் பெரிய கோயிலில் திருப் புன்னை மரத்தின் கீழே நம் முதலிகள் இருந்து சாத்தி ரார்த்த விசாரங்கள் செய்தருளா நிற்பர்கள்; அவற்றைக் கேட்டுக் களிக்க வேண்டும் என்கின்ற ஆசையினால் நெருக் கிமான அவ்விடத்திலும் பல ரீ வைணவர்கள் ஒருவர் மேல் ஒருவராக நெருக்கிக் கொண்டு நின்று கேட்பார் கிளாம்: ரீ வைணவர்கள் எத்தனைபேர் நெருக்கினாலும் வருத்தம் இல்லை; அந்த நெருக்கத்தைக் கண்டு சாமானிய மிக்களும் அங்குத் தங்களுக்கு ஏதோ இலாபம் கிடைப்ப 13 பிள்ளைப் பிள்ளை-இவர் கூரத்தாழ்வான் ଘ சம்பந்தம் பெற்றவர்களில் ஒருவர். էՔ திருவடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/329&oldid=921041" இலிருந்து மீள்விக்கப்பட்டது