பக்கம்:வைணவ உரைவளம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 2 வைணவ உரைவளம்

வார் புனல்-சிறந்த தீர்த்தங்கள்; அம்-அழகிய; வட திருவேங்கடம்-வடக்குத் திருமலை: பல பேர்-பல திருநாமங்கள்; உலகோர்உலக மக்கள்; ஆடி-நடனம் ஆடி. ஆர்வம் பெருகி-ஆசை விஞ்சி; குனிப்பர்-தொழப் படுவார்)

இது நம்மாழ்வார் அருளியது; திருவாய்மொழியி அள்ள ஒரு பாசுரம். பகவத் குணங்களில் ஈடுபட்டுக் களித்துப் பரவச சரீரர்களாக இருப்பவர்களைக் கொண் டாடியும் அஃது இல்லாதாரை நிந்தித்தும் செல்லும் திருவாய்மொழியில் உள்ள இப்பாசுரத்தில் திருவேங்கட முடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுவாரைக் கொண்டாடு கைக்கு நாம் யார்? நித்திய சூரியகளன்றோ இவர்களைக் கொண்டாடுவார்கள்?' என்கின்றார். பித்தர் என்றே பிறர் கூற : என்பதன் பொருளை அநுபவித்து மகிழும் போது, அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா என்று பேசுகின் றார் பிறர் என்னை என்ற பெரிய திருமொழியையும்,28 பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும் என்ற பெருமாள் திருமொழியும்?' ஈண்டு அநுசந்திக்கத் தக்கன. வைணவர்கள் அங்கீகாரம் பெறுமதிலும் வைண வர்களல்லாதார் வசை கூறிக் கைவிடுவதே மிகவும் 23. பெரி. திரு. 7.1;8 24. பெரு. திரு. 3:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/335&oldid=921054" இலிருந்து மீள்விக்கப்பட்டது