பக்கம்:வைணவ உரைவளம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 3 T 9 அனந்தாழ்வானுக்கு நாம் ஐயம் தீர்த்ததாக ஆக வொண்ணாது என்று கருதிய பட்டர், ஏகாயநர்3" இரு தோளன் என்னா நின்றார்கள்: நம்முடையவர் நாற்றோளன் என்னா நின்றார்கள்' என்று மறுமொழி கூற, உடனே, இரண்டிலும் வழி ஏது?' என்ன, இரு தோளன் என்று தேறினால் பெரிய பெருமாளாக அது சந்திக்கின்றோம்; நாற்றோளன் என்று தேறினால் பெருமாளாக அநுசந்திக்கின்றோம்' என்று அருளிச் செய் தார். பெரிய பெருமாள் கையினார் சுரிசங்கனலாழியர்' (அமலனாதி-7) என்ற திருப்பாணாழ்வாரின் பாசுரப்படி நாற்றோளானாயிருக்கவும் அறிவிலிகளான நம்போலிய ருக்கு இருதோளனாகத் தோற்றுவதுபோல், பரமபத நாத னும் சிலருடைய அறிவுக்கு இருதோளனாகத் தோற்றக் கூடும். நான்காய்த் தோன்றுகைக்கு நாற்றோளனாய் அவதரித்தானோ? எனின் : ஆதியந்சோதியை அங்கு வைத்து இங்குப் பிறந்த' (திருவாய் 3.5:3)விடத்து நாற்றேளனாயன்றோ அவதரித்தது? மறைத்துக்கொள்க’ (வசுதேவர் கூற்று-பாகவதம் 5:3) என்ன, மறைத்துக் கொண்டான் மற்றைத்தோள்களை . நிலாத்துக்குறிப் பகவர் பட்டரை நோக்கி, :பூர் வைகுண்டத்தில் நாற்றோளனாக இருக்கும் என்னு மிடத்திற்கு பிரமாணமுண்டோ? என்ன, பிரகிருதி மண்டலத்திற்கு மேலேயுள்ள பூரீவைகுண்டத்திலிருப்பவர் சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், போஷகர் என்று உண்டாயிருந்ததே என்ன, வேறு பதில் சொல்ல முடியாமையாலே வேறுபட்டவரா யிருக்க, அபிரமாணப்போக்குஇதுவாயிருந்தது பொறுக்கலாகாதோ?” என்று அருளிச்செய்தார். 36. ஏகாயநர்-துவைதிகள். 37. பெரிய பெருமாள்-திருவரங்கநாதன், பெருமாள் -இராமபிரான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/342&oldid=921069" இலிருந்து மீள்விக்கப்பட்டது