பக்கம்:வைணவ உரைவளம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 வைணவ உரைவளம் "தாளும் தடக்கையும் கூப்பி : இதிலுள்ள நுட்பம் கண்டறியத் தக்கது. தாள் கூப்புகையாவது என்ன? தடக் 6) க கூப்புகையாவது என்ன? என்று: ஆராய்ந்து காண,வேண்டும். இவையிரண்டாலும், ஆகிஞ் சந்யமும்3 அநந்யகதித்துவமும்3 தெரிவிக்கப்பட்டவாறாம் தாள்களைக் கூப்பிவிட்டால் வேறெங்கும் எனக்குப் போக்கிடமில்லை" என்று சூசனையாதலால் அதனால் அநந்யகதித்துவம் தெரியும்; கைகூப்பிவிட்டால் என் கையில் ஒன்றும் இல்லை" என்கின்ற சூசனையாதலால் அதனால் ஆகிஞ்சந்யம் தெரியும்; ஆக, அகங்கார மமகாரங்கள் அற்றபடியைக் கூறினவாறு. 15Ο நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப் போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான்தன்னைப் பாதம் பணியவல் லாரைப் பணியளவு மவர்கண்டிர் ஒதும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடைய யார்களே 38. ஆகிஞ்ச ந்யமாவது-கர்ம ஞான பக்திகளிலும் அவற்றுக்கு ஏதுவான ஆத்ம குணங்களிலும் அந்வய மின்றிக்கே, அவற்றுக்கு விபரீதங்களானவற்றாலேதான் பரிபூர்ணனாயிருக்கிற இருப்பையும் தன்னுடைய சொரூபம் சர்விப்பிரகாரத்தாலும் ஈசுவரனுக்கு அத்யந்த பரதந்திர மாய் இருக்கிற இருப்பையும் அதுசந்தித்து, நம் காரியத் திற்கு நாம் கடவோம்’ என்றிருக்கை. 39. அநந்யகதித்துவமாவது - களையாய் துன்பம் களையாதொழிவாய், களை கண் மற்றிலேன்' (திருவாய். 3.8:8) என்கின்றபடியே சர்வேசுவரனையொழிய இரட்சகர் வேறு இலர் என்றிருக்கை. 40. திருவாய் 3. 7. 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/343&oldid=921071" இலிருந்து மீள்விக்கப்பட்டது