பக்கம்:வைணவ உரைவளம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 33% |கண்ணி-மாலை; காதல்-ஆசை, கனகம்பொன்; சோதி-ஒளி; முடி-கிரீடம்; எண் இல்-கணக்கற்ற; பல்கலன்கள்-பல திருவா பரணங்கள்; ஏலும்-ஏற்றதான, அஃதேஅந்தக் காதலே: நண்ணி-கிட்டி: நவிற்றும்துதிக்கின்ற; கீர்த்தி-புகழ்: அஃதே-அந்தக் காதலே.) எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பத்தைக் கூறும் திருவாய்மொழியிலுள்ள ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், காலத்தை நடத்துகின்ற சக்கரத்தையுடையவ னான எம்மானும் எம்பிரானுமான கண்ணபிரானுக்கு, என்னுடைய உயிரானது அவன் அணிந்து கொள்ளுகின்ற மாலையா யிராநின்றது. அவன் உடுத்தியிருக்கின்ற பொன்மயமான ஒளி பெரருந்திய திருமுடி முதலான எண்ணற்ற பலவித ஆபரணங்களும் என் அன்பேயா யிரா நின்றது; பொருந்திய பீதாம்பரமும் அந்த அன்பேயாகும்: மூவுலகத்தாரும் பொருந்திச் செல்லுகின்ற கீர்த்தியும் அந்த அன்பேயாகும்' என்கின்றார். 'ஏலும் ஆடையும் அ.தே' : இவ்விடத்தில் ஈட்டில் ஓர் ஐதிகம் உண்டு; அதாவது-ஒருநாள் ஒரு வைணவ வண்ணாத்தான், திருப்பரி வட்டங்களை அழகியதாக வாட்டிக் கொண்டு வந்து (சலவை செய்து கொண்டு வந்து) எம்பெருமானார்க்குக் காட்ட, அவரும் முழு மன நிறைவு அடைந்து அவனைப் பெருமாள் திருவடிகளிலே கைப்பிடித்துக்கொண்டு புக்கு, நாயன்தே! இவன் திருவரைக்குத் தகுதியாம்படி வாட்டினபடி திருக்கண் சாத்தியருள வேணும்' என்று சொல்லி இவற்றைக் காட்டி யருள, பெருமாளும் கண்டு உகந்தருளி உடையவரை நோக்கி வாரீர் இவனுக்காக, முன்பு வண்ணானொருவன் நம் திறத்தில் செய்த குற்றம் பொறுத்தோம் என்று திருவாய் மலர்ந்தருளினார்' என்று. வண்ணான் முன்பு செய்த குற்றமாவது: கண்ணபிரானும் பலசாமனும் அக்ரூர.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/354&oldid=921095" இலிருந்து மீள்விக்கப்பட்டது