பக்கம்:வைணவ உரைவளம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 6°ü4°teki *-eşinismıh கருவுடைத் தேவுஇல்கள் எல்லாம் "கடல்வண்ணன் கோயிலே' என்னும்: வெருவிலும் வீழ்விலும் ஒவாக் கணணன் கழல்கள் விரும்புமே. : (திரு-செல்வம்; திருமால்-திருமகள் கொழுநன்; உடு உடை-அழகிய வடிவங்களையுடைய; வண்ணங்கள்-பொருள்கள்; துள்ளும்-ஆடு வாள்; கருஉடை-திருமேனி உடைய, தேவு இல்கள் - தேவாலயங்கள்; வெருவிலும்அஞ்சிய போதிலும்; வீழ்விலும்-மோகித்த போதும்; ஒவா-ஒழியாத வளாகி; விரும்பும்பேண நின்றான்.) தாய்ப் பாசுரம் : பிரிவாற்றாது போலிப் பொருள் களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தலாக வரும் திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். இதில், செல்வத்தையுடைய அரசர்களைக் கண்டால் திருமகள் கேள்வனைக் கண்டேன் என்பாள்; அழகுபொருந்திய வடிவங்களைக் கண்டால் உலகத்தை யெல்லாம் அளந்த திரிவிக்கிரமன் என்று துள்ளு வாள்; படிமங்களையுடைய கோயில்கள் எல்லாம் கடல் போன்ற நிறத்தையுடைய திருமால் கோயில்களே என்பாள்: தெளிவுடையளாய்ப் பந்துக்களுக்கு அஞ்சின காலத்திலும் மயங்கின காலத்திலும் இடை விடாமல் கண்ணபிரானுடைய திருவடிகளை விரும்பா நின்றாள்' என்று திருத்தாயார் தன் மகள் நிலையைக் கூறுகின்றார். "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் : அரசன் சாமமந்தன் தலையிலே அடியை யிட்டு யானைக் கழுத்திலே ஏறும்போது நாதமுனிகள் கண்டு, சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே 5. திருவாய். 4.4:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/357&oldid=921101" இலிருந்து மீள்விக்கப்பட்டது