பக்கம்:வைணவ உரைவளம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$48 வைணவ டிரைவளம் (சேஷத்துவத்தையும்), நமஸ்ஸா ஒருவனையே பிரதான மாகக் கொண்டிருக்கும் தன்மையையும் (பாரதந்திரியத் தையும்), நாராயணாய என்பது ஆன்மா இறைவனுக்குப் புரியவேண்டிய அடிமைத் தொழிலையும் (கைங்கரியம்) உணர்த்துகின்றன என்பது இம்மந்திரத்தின் விளக்கம். மேலும், இவற்றுள் பிரணவம் பிரிந்திருக்கும் நிலையில் 'அ', 'உ', 'ம' என்ற மூன்று எழுத்துகளைக் கொண்டது. இம்மூன்று எழுத்துகளும் முறையே இருக்கு, யஜூர், சாமம் என்ற மூன்று வேதங்களின் உயிர்நிலையான எழுத்துக ளாகும். ஆகவே, பிரணவம் சகல வேத சாரமாகின்றது. இந்த மூன்று எழுத்துகளும் மூன்று சொற்களாக நின்று மேற்கூறிய மூன்று பொருள்களையும் தெரிவிக்கும். அஃதாவது, அகாரம் பகவானையும், அதில் ஏறி மறைதி துள்ள வேற்றுமை (ஆய’ என்பது) அடிமைத் தன்மையை யும் (சேஷத்துவம்) உகாரம் அந்த அடிமைத் தன்மை மற்ற வருக்கில்லாமல் எம்பெருமானுக்கே உரியதாயிருக்கும் தன்மையையும் (அநந்யார்ஹத்துவம்), மகாரம் ஞானவா னாகிய சீவான்மாவையும் தெரிவிக்கின்றன. இங்ங்ணம் ஆன்மாக்கள் யாவும் சீமன் நாராயணனுக்கே அடிமை என்ற உணர்வுடன் கூடிய மனநிலை தோழியின் கூற்றாக வெளியிடப்பெறுகின்றது என்பது ஆன்றோர் துணிபு. திருவாய்மொழியில் தோழியின் பாசுரமாக வரும் மூன்று பதிகங்களும்' பிரணவத்திலுள்ள உகாரத்தின் பொரு ளான அநந்யார்ஹத்துவத்தை வெளியிடுகின்றன. அகப்பொருள் இலக்கியத்தில் வரும் தோழியின் பங்கு மிகப் பெரிது. அவளே தலைவியைத் தலைவனுடன் கூட்டி வைப்பதற்குக் கருவியாக இருப்பவள். அங்ஙனமே பகவத் 17. திருவாய் 4.6:6.5: 8, 9. திருமங்கையாழ்வார் அருளிச் செயல்களில் தோழியின் பாசுரமாக ஒன்றும் இல்லை. 13. இங்குத் தலைவன் தலைவியை அடையவேண்டும் என்று துடித்து நிற்பாள். தோழி இங்கிதம் அறிந்து தலைவியுடன் கூட்டிவைப்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/365&oldid=921121" இலிருந்து மீள்விக்கப்பட்டது