பக்கம்:வைணவ உரைவளம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B44 வைணவ உரைவளம் இத் திருவாய்மொழி வெறிவிலக்குத் துறையில் அமைந்தது. ஆழ்வார் தாமான தன்மையை இழந்து ஒரு தலை மகள் நிலைமையை எய்தி, அந்நிலையிலும் தம் வாயால் சொல்லமாட்டாமல் வேற்று வாயாலே சொல்ல வேண்டித் தோழியின் பேச்சாகச் செல்லுகின்றது. இப்பாசுரத்தில் தோழி, சிறுதெய்வங்களைக் குறித்துப் பண்ணும் சாந்திகளால் இவளுடைய நோயைப் போக்குதல் அரிது; எம்பெருமானுடைய இலட்சணங் களைச் சொல்லில் இவளைப் பெறலாம்' என்கின்றாள். அதாவது, நீங்கள் இப்படியும் அறிவுகெட்டு மயங்கலாகுமா? இவளுடைய நோய் மிக்க பெரிய தெய்வம் காரணமாக வந்தது; நீங்கள் பொருத்தமில்லாமல் அணங்கு ஆடுகின்ற புன்சிறு தெய்வங்கள் காரணமாக வந்ததன்று என்பதை உணர்ந்து மயக் கமல்லாமல் சங்கு சக்கரம்’ என்று இவள் கேட்கும் படியாகச் சொல்வீர்களாகில் நலம் பயக்கும்: இவளும் இச்சரிரத்தையே இடமாகப் பெறுவாள்; இதனை நீங்களே காணுங்கள்' என்கின்றாள். பாகவதர்களுடைய திருமாளிகையிலே புன்சிறு தெய்வங்கள் வந்து புகுரமாட்டா என்பதற்கு ஐதிகம், காட்டுகின்றார் ஈட்டாசிரியர்: ; பிள்ளையுறங்காவில்லி தாசருடைய குடிமகன் (படியாள்) ஒருவனுக்கு, ஐயனார் ஏறிவந்து நலிந்தவாறே, உனக்கு வேண்டுவதுஎன்?' என்று கேட்க, எனக்குப் பாலும் பழமுமாக உண்ணவேணும்: சாந்தும் புழுகும் பூசவேணும்; நல்லபுடைவையை உடுக்க வேணும்; நல்ல ஆபரணம் பூணவேணும்;தண்டு (பல்லக்கு) ஏறவேணும்; அணுக்கன் (குடை) இடவேணும்' என்ன, அவர்களும் அப்படியே செய்கிறோம்" என்று பிள்ளையின் திருமாளிகையிலே வந்து, சாந்து, புழுகு, ஆபரணம் முதலானவைகளை வாங்கிக்கொண்டு போய் அவற்றை அலங்கரித்துச் சாந்தியும் செய்துவிட்டு வந்த அவ்விரவு, பண்டையிலும் இருமடங்கு அதிகமாக அவனை வலிக்க, :இஃது என்?’ என்று கேட்க, :பிள்ளை சாத்திக்கொள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/367&oldid=921125" இலிருந்து மீள்விக்கப்பட்டது