பக்கம்:வைணவ உரைவளம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 345 கின்ற வற்றையெல்லாம் கொண்டு வந்தீர்கள்; அவர்க்குச் சாத்துகின்ற அணுக்கனை இட்டீர்கள்: நான் அதன்கீழ்ப் போவேனோ? என்னை வெயிலிலே கொண்டு போனtர்கள்; என் உடம்பிலே நெருப்பை வழியட்டினாற்போலே அவர் சாத்துகிறவற்றைப் பூசினிர்கள்; அரிகண்டம் இட்டாற் போலே அவர் சாத்துகிற ஆபரணத்தைப் பூட்டினிர்கள்: நீங்கள் செய்த செயலுக்கு இவனைக் கொண்டல்லது போகேன்" என்று வலித்ததாம். இப்பாசுரத்தின் ஈட்டுரையில் மற்றோர் ஐதிகம் பாரா பட்டர் காலத்தில் ஆய்ச்சிமகன் என்றொரு பாகவதர் இருந்தார்; அவர் நோவு கண்டு உணர்ச்சியற்றுக் கிடக்கும் நிலையில் பட்டர் அவரைப் பார்க்க எழுந்தருளினாராம். அப்போது அந்த ஆய்ச்சிமகன் அடியோடு அறிவு நடை யாடாதபடி இருப்பதைக் கண்டு பட்டர் அவர் அழகிய ம ன வ ா ள னி ட த் தி ல் மிக்க பக்தியுடயைவர் என்பது காரணமாக அவருடைய திருச்செவியில் அழகிய மணவாளப் பெருமானே சரணம்' என்றாராம்; அதனால் அவருக்கு உணர்ச்சி உண்டாகி நெடும் போ தெல்லாம், "அழகிய மணவாளப் பெருமானே சரணம்’ என்று நாவினால் நவிற்றிக்கொண்டே திருநாட்டுக்கு எழுந்தருளினாராம். திசைப் பின்றியே சங்கு சக்கரம் என்றிவள் கேட்க நீர் இசைக்கின்றீர்' என்பதற்கு இந்த திகழ்ச்சி பொருந்துகின்றது. ዝ 63 தணியும் பொழுதில்லை ரேணங் காடுதிர் அன்னைமீர் பிணியும் ஒழிகின்ற தில்லை பெருகுமிது வல்லால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/368&oldid=921126" இலிருந்து மீள்விக்கப்பட்டது