பக்கம்:வைணவ உரைவளம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 வைணவ உரைவளம் தாசர் செண்டலங்கார தாசர் என்ற இரண்டு பூரீவைணவர்களோடு ஒரிடத்திற்குச் செல்லு கையில் வழியில் ஒர் அமணன் பாழி (சமணர் கோயில்) தென்பட்டது: அப்போது இரவு நேரம். அக்கோயில் வாசலில் சிங்கப்பதுமை இருப்பதைக் காட்டி அவ்வாழ்வான் *பகவத் சந்நிதி சேவியுங்கள்' என்று வேடிக்கையாகக் சொல்ல, அவர்களும் அதை மெய் என்று எண்ணி சேவித் தார்கள். சேவித்த பிறகு இஃது அமணன் பாழி என்று அறிந்தவாறே மோகித்து (மயக்க முற்று) விழுந்தார் களாம். அப்போது அருகேயிருந்த பிள்ளையுறங்கா வில்லி தாசர் தம்முடைய பாத துாளியை அவர்களுக்கு இட அவர்களும் மோகம் தெளிந்து எழுந்தார்களாம். இன்னோர் ஐதிகம் : திருக்கொட்டாரத்தின் அருகே கைந்நிரை 28 கட்டிக் கொண்டிருக்கின்ற நாளிலே நஞ்ச சியர் இத் திருவாய்மொழியை (தீர்ப்பாரை யாமினி" என்பதை) அருளிச் செய்யும்போது தேர்ப்பாகனார்க்கு (4. 6. 1) என்று நோய்க்கு நிதானம் சொன்னாளாகில், அத்தேர்ப்பாகனை இட்டு நீக்கிக் கொள்ளாமல் மாயன் தமர் அடிநீறுகொண்டு அணிய முயலின்' என்று இதனைப் பரிகாரமாகச் சொல்லுவாள் என்? நோக்கு நிதானம் ஒன்றும், பரிகாரம் ஒன்றுமேயாயோ இருப்பது?" என்று நான் நம்பிள்ளையைக் கேட்டேன்; மோர்க்குழம்பு இழியாதே மோகித்துக் கிடந்த சமயத்தில் சுக்கு இட்டு ஊதிப் பின்பு மோர்க்குழம்பு கொடுத்துப் பரிகரிப்பாரைப் போலே, தேர்ப் பாகனார்க்கு என்னும் போதே அவரைக் கொண்டுவந்து காட்டப்பெறாமையாலே, முற்பட இவ் வழியாலே தேற்றிப் பின்னை அவரைக் கொடுவந்து காட்டுவதாகக் காணும்' என்று அருளிச் செய்தார். 24. இவர்கள் இருவரும் வில்லிதாசரின் மக்கள் : வண்டவலலி செண்டவல்லி என் திருநாமம் உடையவர்கள் . இராமாநுசரால் ஆட்கொள்ளப்பெற்ற பிறகு இந்தத் தாஸ்ய நாமம் பெற்றனர். 25. கைந்நிரை-நிரைச்சல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/371&oldid=921133" இலிருந்து மீள்விக்கப்பட்டது