பக்கம்:வைணவ உரைவளம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 36? முன்னை அமரர்.முதல்வன் வண்துவ ராபதி மன்னன் மணிவண்ணன் வாசு தேவன் வலையுளே." (இனி-இனிமேல்; என்னை-என் திறத்தில் (வேற்றுமை மயக்கம்): ஆசைஇல்லை-ஆசை வைக்க நியாயம் இல்லை; அமரர் முதல்வன்நித்தியசூரியின் முதல்வன்: வண்-அழகிய; மணி வண்ணன் - நீல மணி வண்ணன்; வலையுள்-வலையினுள்ளே ! இது மகள் பாசுரம், பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகன் காதல் கைமிக்கு மடலூரத் துணிதலைக் கூறும் திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். இதில் ஆழ்வார் நாயகி, தோழியர்களே, முற்பட்டவர்களான நித்தியசூரி களுக்குத் தலைவனும் வளம் பொருந்திய துவாரகையென் னும் திவ்விய தேசத்திற்கு அரசனும் மணிவண்ணனுமான வாசுதேவனுடைய வலையுள் அகப்பட்டேன்; ஆதலால், இனி தாயானவள் எந்தக் காரியத்தைச் செய்தால் என்ன? ஊரிலுள்ள மக்கள் எந்தப் பழிச் சொற்களைக் கூறினால் என்ன? என்பக்கல் உங்களுக்கு ஆசை வேண்டாம்' என் கின்றாள். வலையுள்... அகப்பட்டேன் : வாசுதேவனாகிய வலை யிலே அகப்பட்டேன் என்றும், வாசுதேவனுடைய வலை யிலே அகப்பட்டேன் என்றும் பொருள் பெறும்; வலை யாவது தன்பக்கலில் அகப்பட்டாரை வேறு இடத்திற்குப் போகவொட்டாமல் செய்வதாதலால் எம்பெருமானை வலையாகக் கூறுதல் பொருந்தும். 'பாலால் இலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை' 13. திருவாய், 5.3:5 14. நாச்.திரு. 1:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/390&oldid=921175" இலிருந்து மீள்விக்கப்பட்டது