பக்கம்:வைணவ உரைவளம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 3雷鲁 கிரைகொாக்தாதி யோரா விரத்துள் இப்பத்தும் உரைக்கவில் லார்க்கு வைகுக்த மாகுந்தம் ஊரெல்லாம்." (இரைக்கும்-ஒலிக்கின்ற; விரைகொள்-பரிமளம் மிக்க; பொழில்-சோலை; நிரை கொள்ஒழுங்குகளைக் கொண்ட, உரைக்க-ஒத; தம் ஊர் எல்லாம்-தம் இருப்பிடம் எல்லாம்: வைகுந்தம்-பரமபதம்.! மகள் பாசுரம் : மடலூர்தலைப்பற்றிப் பேசும்" திருவாய்மொழியின் பலசுருதிப் பாசுரம். ஒலிக்கின்ற கரிய கடல் போன்ற நிறத்தை உடையவனான கண்ண பிரானை, மணம் மிக்க சோலைகளால் சூழப் பெற்ற திருக்குருகூரில் அவதரித்த சடகோபர் அருளிச் செய்த நிரை நிரையாக அமைந்திருக்கின்ற அந்தாதியான ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களை யும் ஓத வல்லவர்களுக்குத் தாங்கள் தாங்கள் இருக்கின்ற ஊர்கள் எல்லாம் வைகுந்த மாநகரமாகும்' என்று இத் திருவாய்மொழியைத் தலைக் கட்டுகின்றார். இரைக்கும் கருங்கடல் வண்ணன்' என்றதற்கு இரண்டுபடியாக அருளிச் செய்வர்கள். வண்ணம் என்று நிறத்துக்கும் தன்மைக்கும் பெயர்; நிறத்தைச் சொல்லும் போது மடலூர்ந்தாகிலும் பெற வேண்டும்படியான வடிவழகு சொல்லிற்றாகின்றது. தன்மையைச் ரொல்லும் போது, பிரக்ருதத்தில் கடலுக்கும் எம்பெருமானுக்கும் துல்லியமாகச் சொல்லக் கூடிய தன்மையாதெனில்: இங்கே இன்சுவைமிக்க ஈட்டு ரீ சூக்தி காண்மின் ! 'அனந்தாழ்வான் பணித்தானாக கஞ்சியர் திருநாராயண புரத்திலிருந்து வந்து பட்டரிடத்தில், வில்லைக் கொண்டு 18. திருவாய். 5.3: ll

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/394&oldid=921183" இலிருந்து மீள்விக்கப்பட்டது