பக்கம்:வைணவ உரைவளம்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 வைணவ உரைவளம் அன்றிக்கே, சர்வாதிகாரமுமாய், எப்பொழுதும் உண்ணக் கூடியதாய், பிரம்மச்சரியம் முதலானவற்றினின்றும் நழுவு தலால் வரும் குற்றங்களையும் தானே போக்கக் கூடியதாக இருக்கும். இத் திருப்பெயர் போக்கியம் என்பதற்கு ஈட்டில் காணப் பெறும் ஐதிகம் : வடநாட்டில் லோக சாரங்க மகாமுனிகள் வசித்துக் கொண்டிருக்கும்போது, இங்கேயுள்ள ஒருவன் அங்கு ஏறச் செல்ல, 'பிள்ளாய், தென்னாட்டில் சிறப்பு என்ன?' என்று கேட்க, திருவாய்மொழி என்ற ஒரு பிரபந்தம் அவதரிக்க, அதனைச் சீடர்கள் மேற்கொண்டு போரக் கொண்டாடிக் கொண்டு போகா நின்றார்கள்' என்ன, அதிலே உனக்குப் போவதொரு பாசுரத்தைச் சொல்விக் காணாய்' என்ன, ஆராவமுதே' என்கிற இத் துணையே எனக்குப் போம்" என்ன, நாராயணன் முதலிய நாமங்கள் கிடக்க, இங்ங்னேயும் ஒரு பெயர் உண்டாவதே" என்று அதனைக் காண மிக்க ஆவலுடையவராய், இச் சொல் நடையாடுகின்ற தேசத்து ஏறப்போவோம்’ என்று அப்பொழுதே புறப்பட்டுப் போந்தார். T 73 "மானேய் நோக்கு : (மகள் பாசுரம்). இது தானான தன்மை நீங்கி பிராட்டியின் தன்மையை ஏறிட்டுக் கொண்டு பராங்குச நாயகி நிலை பில் இருந்து கொண்டு, பேசும் திருவாய்மொழி. எம்பெருமானோடே கலந்து பிரிந்து அந்தப் பிரிவாற்றாமையாலே நோவு படுகின்றாள் பிராட்டி. அவள் தன்னுடைய குடிப் பிறப்பு முதலியவற்றையும் பாராமல், திருவல்லவாழ் ஏறப் புறப் பட்டுப் போகப் புக, இதனை அறியும் தோழிமார் வந்து *இது காரியம் அன்று; நம் தலைமைக்குப் போராது காண்” என்று இதம் சொல்லி மீட்கப் பார்க்க, இனி நீங்கள் 34. திருவாய். 5. 9 (அவதாரிகை காண்க).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/403&oldid=921203" இலிருந்து மீள்விக்கப்பட்டது