பக்கம்:வைணவ உரைவளம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 3穆贯 சொல்லுகிறவற்றால் நான் பெற்றது என்: அவ்வூரில் திருச் சோலையும், அங்குண்டான பரிமளத்தைக் கொய்து கொண்டு புறப்படுகிற தென்றலும், அங்கே தேனைக் குடித்துக் களித்துப் பாடா நின்றுள்ள வண்டுகளினுடைய இனிதான மிடற்றோசையும், ஊரிலுண்டான வைதிகக் கிரியைகளின் கோலாகலங்களும் நகர சம்பிரமங்களும். இவையெல்லாம் நீங்கள் என்னை மீட்க நினைப்பதைப் போன்று அங்கே போரு போரு' என்று அழையா நின்றன: ஆனபின்பு நீங்கள் சொல்லுகிறவற்றால் பெற்றது என்" என்று தன் துன்பத்தை அவர்களுக்கு அறிவுறுத்தி அவர் களை வேண்டிக் கொண்டு, திருவல்லவாழிலே நான் நினைத்தபடியே போய்ப்புக்குப் பரிமாற வல்லேனே' என்று அவர்களுக்குச் சொல்லுகிறாளாகின்றது. இங்கு ஈட்டில் இரண்டு திருஷ்டாந்தங்கள் காட்டப் பெறுகின்றன. ஒன்று : இதுதான் நான் அநுபவித்தேன்' என்று கஞ்சீயர் அருளிச் செய்வர். பட்டர் திருவடிகளை ஆச்ரயித்த பின்பு ஒருகால் மேல் நாட்டுக்கு எழுந்தருளி பெரிய விரைவோடே திருநாளுக்கு உதவ வேணும்' என்று வர, திருக்கரம்பன் துறையளவிலே3 வந்தவாறே நினைவின் றிக்கே காவிரி பெருகிக் கிடக்க, இராத் திரு நாள் எழுந் தருளி இங்குண்டான சம்பிரமங்களெல்லாம் செவிப்படுவது வந்து புகுரப் பெறாதொழிவதாய்க் கொண்டு போர நோவு பட்டோம்" என்று அருளிச் செய்வர். 35. திருநள்ே-திருவரங்கத்தில் மார்கழித் திங்களில் நடைபெறும் அத்யயன உத்சவத்தை (பகல் பத்து இராப் பத்து) 36. இப்போது உத்தமர் கோயில் என வழங்கும் திவ்வியதேசம். திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து ஆறு கல் தொலைவிலுள்ளது .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/404&oldid=921206" இலிருந்து மீள்விக்கப்பட்டது