பக்கம்:வைணவ உரைவளம்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$o? aацана в.ову анатф இரண்டு ஏகதத்விதத்ரிதர்கள் சுவேத தீபத்தைச் சென்று கிட்டி, உள்ளுப் புகுகைக்குத் தகுதி இல்லாமை யாலே புறம்பே நின்று, அங்குள்ளார் எம்பெருமானைக் கண்டு படுகிற சம்பிரமத்தைச் செவியாலே கேட்டு நிற்பது, கண்ணாலே காணப் போகாதொழிவதாய்க் கிடந்து பட்டாற்போலே கிடந்து கூப்பிடுகிறாராயிற்று இவரும். 179 மானேய் நோக்குகல்லீர்! வைகலும்வினை யேன்மெலிய வானார் வண்கமுகும் மதுமல்லிகை யுங்கமழும் தேனார் சோலைகள்சூழ் திருவல்ல வாழுறையும் கோனாரை, அடியேன் அடிகூடுவ தென்றுகொலே?" (மான்ஏய்-மான்போன்ற: வைகலும்-எப்பொழு தும்; வினையேன்-பாவியான நான்; மெலிய -இளைக்கும்படியாக; வான்.ஆர்-விண்ணை அளாவிய, மது-தேன்;) இது நம்மாழ்வார் திருவாய்மொழியிலுள்ள ஒரு பாகரம்; திருவல்லவாழ் என்ற திவ்வியதேசத்தின் மீதுள்ளது. இதில் ஆழ்வார்நாயகி "மான் நோக்கை யுடைய பெண்களே, வினையேன் நாள்தோறும் மெலியும் படியாக விண்ணை முட்டும் வளமான பாக்கு மரங்களும் தேன் பொருந்திய மல்லிகையும், மணம் வீசும் தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ் என்னும் 37. ஏகதத்விதத்ரிதர்கள் - பிரமாவினுடைய மானச புத்திரர்களான இருடிகள். 38. திருவாய். 5.9:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/405&oldid=921207" இலிருந்து மீள்விக்கப்பட்டது