பக்கம்:வைணவ உரைவளம்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 வைணவ உரைவளம் நலமே' என்றான். பிறகு இந்த அவிசு எதற்கு?’ என்று வினவ, அவர்கள், தேவர்களுக்குக் கொடுக்க' என்று சொன்னார்கள். இதனைக் கேட்ட கள்ள வேடத் திருமால், அயலூருக்குச் செல்லும் ஒருவன் எடுத்துச் செல்லும் கட்டமுதை, வேறொருவன் கையிலே இட்டு வைத்துத் தான் போனால் அவன் உண்ட சோறு இவனுக்கு வந்து உதவினாலன்றோ தேவர்கட்குக் கொடுக்கும் அவிசும் உங்களுக்கு உதவும்" என்றான். பிறகு இந்த ஆடுகள் எதற்கு? என்று கேட்க, அவர்களும் வபையை எடுத்து. ஓமம் பண்ண" என்று அசுரர்கள் செப்பினர். கள்ள வேடத் திருமால், ஆனால் ஆட்டு வாணியனைப் பரம தார்மிக னாகக் கொள்ளலாம் போலும் என்றான். இப்படியே பலப்பல குறும்புச் செயல்களாலே அவர்களைக் குழம்பும் படி செய்ய, அவர்களும் அவன் சொல்லியவற்றில் நம்பிக்கை கொண்டு வேள்வி இயற்றுவதை விட்டு அறவழி செல்லும் அக்கறை குறைந்து உருத்திரனையும் திட்டத் தொடங்கினர். இந்நிலையில் கள்ள வேடத் திருமால் உருத்திரனிடம் சென்று அகரர்கள் உன்னைத் திட்டுகிறார்கள்' என்று. கூற, உருத்திரனும் அதனைக் கேட்டுச் சீறிச் சிவந்து அவர் களைக் கொல்லத் திருவுள்ளங் கொண்டான். பூமியைத் தேராகவும், சந்திர சூரியர்களைத் தேர் உருளைகளாகவும், நான் மறைகளை நான்கு குதிரைகளாகவும் நான்முகனைத் தேரோட்டுபவனாகவும் மகாமேருவை வில்லாகவும் ஆதிசேடனை நாணாகவும் கொண்டு போர் நடத்தினான். (இந்த வரலாறு விஷ்ணு புராணத்தில் மூன்றாவது அமிசத் தில் உள்ளது). வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க கின்றதும் : அளவிட முடியாத பராக்கிரமத்தை உடைய வனும், பூஜ்யனுமாயிருக்கிற சிவனுக்கு, சர்வவியாபியான விஷ்ணுவானவர் அந்தர்யாமியாக இருக்கிறார்; அப்படி இருப்பதனாலே, அந்தச் சிவன், திரிபுரங்களை அழிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/413&oldid=921227" இலிருந்து மீள்விக்கப்பட்டது