பக்கம்:வைணவ உரைவளம்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 வைணவ உரைவளம் துரங்கம் வாய்பிளந் தானு றைதொலை வில்லி மங்கல மென்று,தன் கரங்கள் கூப்பித் தொழுமவ் வூர்த்திரு நாமங் கற்றதற் பின்னையே.”* (இரங்கி - நெஞ்சழிந்து; வாய்வெரீஇ - வாய் வெருவி; கண்ணநீர்கள்-கண்ணtர்; அலமரசுழல; கூவும்-கூப்பிடா நின்றாள்; துரங்கம்குதிரை, தொலைவில்லி மங்கலம்-நவதிருப் பதிகளில் ஒன்று (இரட்டைத் திருப்பதி); கரங்கள்-கைகள்; தோழி தாயரை நோக்கித் தலைவியின் நிலைமையைக் கூறும் திருவாய்மொழியில் ஒரு பாசுரம். இதில் திருத் தாயார், 'இவள் நாள்தோறும் இரங்கி வாய் வெருவிக் கண்களிலே நீர் தேங்கும்படியாக மரங்களும் இரங்கும்படி மேணிவண்ணா!' என்று கூவுகின்றாள்; பேசுதற்குக் கற்றுக் கொண்ட பிறகு, கேசி என்னும் அசுரனது வாயினைப் பிளந்த எம்பெருமான் நித்திய வாசம் செய்கின்ற திருதி தொலைவில்லி மங்கலம் என்று சொல்லித் தன்னுடைய கைகளைக் குவித்துத் தொழுவாள்' என்கின்றாள். "மரங்களும் இரங்கும் வகை என்றது, பகவத் விஷயத் தில் ஈடுபாடில்லாமையாலே அசேதநப் பிராயர்களான அறிவிலிகளும்கூட ஈடுபடும்படியாயிற்று என்கை. சேதநம் என்றும், அசேதநம் என்றும் வேறுபாடு அற அழியும்படி காணும், இவள் வாய்விட்டுக் கூப்பிடும்படி. மரங்களும். இரங்கக் கூடுமோ?' என்று எம்பாரைச் சிலர் கேட்டார் களாம். அதற்கு அவர், அருளிச் செய்த விடை: இத் திருவாய்மொழி அவதரித்த அன்று தொடங்கி பாவ சுத்தி இல்லாத எத்தனை பேர்களுடைய வாயிலே இது புகுத்த தென்று தெரியாது; இங்ங்னே இருக்கச் செய்தே, இயமம் தியமம் முதலிய யோக உறுப்புகளாலே பதஞ் செய்யப் 22. திருவாய், 6 3:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/429&oldid=921245" இலிருந்து மீள்விக்கப்பட்டது