பக்கம்:வைணவ உரைவளம்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 405 விசேடம்; சோதிதன் - பெருமானுடைய நண்ணி-கிட்டி; நாயகர்-தலைவர்)

  • கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற் றமைக்குக் களிப்பதாகக், கூறும் திருவாய்மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார். பூமியின் மேலே பெரிய பாரம் நீங்கும்படி ஒப்பற்ற மிகப் பெரிய பாரதமாகிய போரைச் செய்து ஆச்சரியமான காரியங்களைச் செய்து சேனைகள் பாழ்படும்படியாக மந்திரித்துப் போய்ப் பரமாகாசமான தன்னுடைய வைகுண்ட லோகத்தைச் சென்று அடைந்த பரஞ்சோதியினுடைய திருவடிகளைச் சேர்ந்து நான் வணங்கப் பெற்றேன்; எனக்குத் தலைவர் வேறு யாவர் உளர்?' என்கின்றார்.

விண்மிசைத் தன தாமமேயுக மேவிய சோதி : இந்த இடத்தில் ஈட்டில் ஓர் ஐதிகம் காட்டப் பெற்றுள்ளது. அதாவது-நம்பெருமாள் சந்நிதியில் ஒரு பிரம்மோத்சவம் முடிந்த அன்று நாயிறுபோது2 ஆண்டானும்2 எம்பாரும் சந்தித்து யான் எனது என்னும் செருக்கினால் மலின மாக்கப்பட்ட (மலினம் - குற்றம்) வராயிருப்பார் பத்து கோடி பேர் நடுவே அதி சுகுமாரமான திருமேனியைக் கொண்டு பத்து நாள் எழுந்தருளி, அபாயம் இல்லாமல் புக்கருளப்பெற்றபடி கண்டதே!' என்று ஒருவரை யொருவர் தண்டன் இட்டுத் தழுவிக் கொண்டார்களாம்" அதை நஞ்சீயர் கண்டிருந்து வெளியிட்டருளினார். T 90 இரங்கி நாடொறும் வாய்வெ ரீஇயிவள் கண்ண ர்ேகள் அலமர மரங்க ளும்இரங் கும்வ கை'மணி வண்ண வோ!' என்று கூவுமால் 20. 3473-ఆfuత படுகின்ற மாலை நேரத் 事 21. ஆண்டான்-முதலியாண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/428&oldid=921244" இலிருந்து மீள்விக்கப்பட்டது