பக்கம்:வைணவ உரைவளம்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.18 வைணவ உரைவளம் வைத்தமா நிதி : எய்ப்பினில் வைப்பினைக், காசினை மணியை 46 என்று திருமங்கை மன்னன் பணிப் பதுபோல், தளர்ந்தார் தாவளமாய், எய்ப்பினில் வைப் பாய், உண்டு' என்ன உயிர் நிற்கும்படியாய், உடையவன் காலிலே எல்லாரும் விழும்படியாய், உடையவனுக்கு அற விட்டு ஜீவிக்கலாய், அறவிட்டு ஜீவித்தான்' என்று ஏசாத படியாய், அவன் தனக்குப் பெருமதிப்பைக் கொடுப்பது மாய், உடையவனுக்கு ஒன்றுக்கும் கரைய வேண்டாத படியாய், எல்லாம் தன்னைக் கொண்டே கொள்ளலாய், எல்லா ரசங்களும் போகங்களும் தன்னைக் கொண்டே கொள்ளலாய், இந்தவிதமான குணங்களையுடைத்தா யிருக்கையைப் பற்ற நிதி' என்கிறது. மாநிதி' என்றது, அழியாநிதி என்றபடியாய், அத்தால் தன்னைக் கொண்டே எல்லாம் கொள்ளா நின்றால் தனக்கு ஒரு குறை அற்று இருக்கை. அல்லா நிதி மாண்டு நிற்குமே. நிதியும் வைத்தமா கிதியும் : இந்த இரண்டும்பற்றிய சிந்தனையோட்டம்: புதைத்து வைக்கப்பெறும் பொருள் நிேதி' எனப்படும். தைத் திரீய உபநிடதத்தினால் எம்பெரு மான் நிதியாக அறியப்படுவன். நிலத்தினுள் புதைத்து வைத்து ஆளவேண்டியதா யிருக்கும் நாட்டிலுள்ள நிதி; எம்பெருமானாகின்ற நிதி அங்ங்ணமின்றி நெஞ்சிலே புதைத்து ஆளத் தக்கது என்ற வேற்றுமை கண்டு மகிழத் தக்கது. நிதியானது தன்னை யடைந்தவர்களை இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது; எந்த நேரத்தில் யார் கொள்ளை கொள்வரோ என்ற அச்சத்தால் துஞ்சா திருப்பர் நிதியுடையார். எம்பெருமானும் அப்படியே : 36. பெரி. திரு. 7.10:4 (திருக்கண்ணமங்கை பற்றிய t_JtT&{7 Lô. 31. பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்" என்பது குறள் (குறள்-751)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/441&oldid=921259" இலிருந்து மீள்விக்கப்பட்டது