பக்கம்:வைணவ உரைவளம்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 429 தோம்’ என்று நினைப்பதற்கு ஒன்று இன்றிக்கே இருக்கும் அன்றோ? இங்ங்னே இருக்கச் செய்தேயும் அவற்றில் ஆசை செலுத்துவது பாவத்தின் மிகுதி அன்றோ? தாவிவையம்...இன்னம் குறுகாதோ : தாவி வையம் கொண்ட தடந்தாமரை' என்றதனால் நினைத்தது தலைக் கட்டும் சத்தியோகம் கூறியபடி, பூமிப் பரப்பு முழுவதும் வருத்தம் இன்றி அளந்து கொண்ட படி-இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் தடந்தாமரை' என்கிறது. இதில் பிராப்யம் சொல்லுகிறது. கூவிக் கொள்ளும் காலம்" என் கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லு கிறது. இன்னம் குறுகாதோ’ என்கையாலே ருசியின் தன்மை சொல்லுகிறது. இதர விஷயங்களின் காட்சி முடியும் படியாய் உன் திருவடிகளில் இனிமை அறிந்து விட மாட்டாத அளவு பிறந்த பின்பு இன்னும் தாழ்க்கும் அத்தனையோ? இங்கே ஓர் ஐதிகம் : "பிள்ளானுடைய" அந்திம தசை யிலே நோவு அறிய கஞ்சீயர் புக்கு இருக்க, கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?' என்று பல கால் சொல்ல, இதனைக் கேட்டு சீயர் அழ, சீயரே! நீர் கிடந்து அழுகிறது ஏன்? அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது (குறைவுடையது) என்று தோற்றி யிருந்ததோ? என்று பணித்தான்.' 2OO ஆஆ! என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல் தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா திருமா மகள்கேள்வா! 61. பிள்ளான்-திருக்குருகைப் பிரான் பிள்ளான். ஆறாயிரப் படியை அருளிச் செய்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/452&oldid=921271" இலிருந்து மீள்விக்கப்பட்டது