பக்கம்:வைணவ உரைவளம்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 வைணவ உரைவளம் எண்ணி லாப்பெரு மாயனே! இமையோர்கள் ஏத்து முலக மூன்றுடை அண்ண லே!அமு தே! அப்ப னே! என்னை யாள்வானே." (உள் நிலாவிய-உள்ளே நிரந்தரவாசம் பண்ணு கின்ற; ஐவர்-பஞ்சேந்திரியங்கள்: குமை தீற்றுதல்-துன்பத்தை நுகரச் செய்தல்; பாதபங்கயம்-திருவடித்தாமரை; நண்ணிலா வகை-கிட்டாதபடியாக, இன்னம்-இன்னும்: நலிவான்-இம்சிப்பதற்காக: எண் இலாஅளவிட முடியாத மாயனே-மூலப் பகுதியை யுடையவனே; இமையோர்கள்-தேவர்கள்: அண்ணலே-சுவாமியே; அமுதே-பரமபோக் கியனே; அப்பனே-மகோபகாரங்கள் செய் பவனே !

இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறு வேன்' என்று ஆழ்வார் வருந்துவதாக அமைந்த திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், எண்ணிறந்த காரியங்களை யெல்லாம் உண்டாக்குகின்ற பெரிய மூலப் பகுதியைச் சரீரமாக உடையவனே! நித்திய சூரிகளால் துதிக்கப்படுகின்ற மூன்று உலகங்களையு முடைய அண்ணலே! அமுதே! அப்பனே! என்னை ஆள்கின்றவனே! உள்ளே உறையும் ஐந்து இந்திரியங்களால் நலிவு படுத்தி, உன் திருவடித் தாமரைகளை நான் சேராதபடி என்னை நலிவதற்கு இன்னம் எண்ணுகின்றாய்' என்கின்றார் ஆழ்வார்.

ஐதிகம்: பிள்ளை திருநறையூர் அரையர் இப் பாசுரங் களின் முன்னிரண்டு அடிகள் இரண்டும், புவியின் வாயிலே --જ-સ્વચ્છા. 1. திருவாய் 1.1.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/461&oldid=921281" இலிருந்து மீள்விக்கப்பட்டது